Kanchipuram

News September 21, 2024

காஞ்சிபுரத்தில் 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு 11 மணி முதல் தற்போது வரை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

News September 20, 2024

காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவிப்பு

image

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.கைம்பெண்கள், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவு பெண்கள், மாற்றுத்திறனாளிகள், சமூக ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இத்திட்டத்தில் பயனடையலாம். இந்த திட்டத்தில் பயனடைய விரும்புவோர் இ சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 20, 2024

காஞ்சிபுரம் அருகே கடைகள் அகற்றம்

image

காஞ்சிபுரம் மடம் தெரு பகுதியில் மஞ்சள்நீர் கால்வாயின் கிளை கால்வாய் செல்கிறது. இக்கால்வாய் அருகில் உள்ள மாநகராட்சி இடத்தை சில ஆண்டுகளுக்கு முன்பாக, சிலர் ஆக்கிரமித்தனர். மக்களின் புகாரின் பேரில் காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகள், வருவாய் துறையினர் மற்றும் போலீசார் ஒன்றிணைந்து, மடம் தெருவில் ஆக்கிரமிப்பில் இருந்த மாநகராட்சி இடத்தை பொக்லைன் இயந்திரம் வாயிலாக, அங்கிருந்த கடைகளை இடித்து அகற்றினர்

News September 20, 2024

சாம்சங் நிறுவனம் ஊழியர்களுக்கு எச்சரிக்கை

image

சாம்சங் நிறுவனத்தின் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள், இன்று 11ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு சாம்சங் நிறுவனம், “வரும் திங்கட்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் பணிக்கு வரவேண்டும். தவறும் பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் தீபாவளி போனஸ் கிடையாது, அடையாள அட்டை முடக்கப்படும்” என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 20, 2024

வரதராஜ பெருமாள் கோயிலில் ரூ.32.93 லட்சம் காணிக்கை

image

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு செலுத்தும் காணிக்கையை, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் எண்ணப்படுகிறது. அதன்படி, கோவிலில் உண்டியல் நேற்று திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்டது. இதில், 32 லட்சத்து 93,980 ரூபாய் ரொக்கமும், 60 கிராம் தங்கமும், 230 கிராம் வெள்ளியும் காணிக்கையாக வரப்பெற்றது என கோவில் உதவி ஆணையர், நிர்வாக அறங்காவலர் சீனிவாசன் தெரிவித்தார்.

News September 20, 2024

கண்ணமங்கலத்தில் கொலையுண்ட பெண் அடையாளம் தெரிந்தது

image

கண்ணமங்கலம் அருகே கொளத்தூர் ஏரியில் பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கண்ணமங்கலம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்திய நிலையில் அந்த பெண் காஞ்சிபுரத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதில் அந்த பெண் காஞ்சீபுரம் கம்பர் தெருவை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மனைவி அலமேலு(50) என்று போலீஸ் விசாரணையில் உறுதியானது

News September 20, 2024

காஞ்சி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம்

image

காஞ்சி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம், இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில் ஆலந்தூரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் செப்.28ஆம் தேதி அன்று காஞ்சிபுரத்தில் நடைபெறும் மாபெரும் பவள விழா குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இதில் அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்ற வேண்டுமென அமைச்சர் தா.மோ.அன்பரசன் அழைப்பு விடுத்துள்ளார்.

News September 20, 2024

காஞ்சிபுரத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

image

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரியில் நாளை (செப்.21) மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், ஹூண்டாய், TVS, அசோக் லைலேண்ட், சுதா்லேன்ட் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு நோ்முகத் தோ்வினை நடத்தவுள்ளன. பட்டதாரிகள், டிப்ளமோ, ஐடிஐ மற்றும் 10, 12ஆம் வகுப்பு படித்தவா்கள் காலை 10 மணிக்கு பங்கேற்று பயன்பெறலாம். ஷேர் பண்ணுங்க

News September 20, 2024

11ஆவது நாளாக தொடரும் சாம்சங் ஊழியர்கள் போராட்டம்

image

சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் நிறுவன ஊழியர்கள், கடந்த 10 நாட்களாக ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் மற்றும் 8 மணி நேர வேலை உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று 11ஆவது நாளாக போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

News September 19, 2024

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி

image

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், அண்ணா பிறந்தநாளையொட்டி வரும் அக்.15ஆம் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது. வாலாஜாபாத் பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், அண்ணாவின் சமூகப் பணிகள், காஞ்சித் தலைவன் அண்ணா என்ற தலைப்புகளில் போட்டி நடைபெறும். முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு ₹5,000, ₹3,000, ₹2,000 பரிசு வழங்கப்பட உள்ளன. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!