India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்ட மின் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாவட்ட தலைவர், செயலர், பொருளாளர், துணை நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நேற்று நடந்தது. இதில், சட்ட ஆலோசகரும், நோட்டரி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அரசு, முன்னாள் மின்வாரிய தொழிற்சங்க நிர்வாகி அருளானந்தம் ஆகியோர் புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்தனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில், கல்லுாரி மாணவர்களுக்கான ஹேண்ட்பால் போட்டி நேற்று நடந்தது. இறுதிப்போட்டியில், காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லுாரி அணியினர், சென்னை ராஜலட்சுமி பொறியியல் கல்லுாரி அணியை 17-6 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் கோப்பையை வென்றது. வாழ்த்தலாமே!
திருமுடிவாக்கத்தில் வசித்து வந்தவர் அருண் சந்திரா (37), இவர் மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளில் மாணவர்கள் படிப்பதற்கு இடம் வாங்கி தருவதாகவும் ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 15-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.45 லட்சம் வரை பணம் பெற்று மோசடி செய்து விட்டு தலைமறைவானர். இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று குன்றத்தூரில் பாதிக்கப்பட்டவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு ( இரவு 7 மணி வரை) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்கள் ஊரில் மழையா? கமெண்ட்ல சொல்லுங்க.
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் செப்.26 ஆம் தேதி மாலை, 4:00 மணிக்கு அஞ்சல் சேவை குறைதீர்வு முகாம் நடைபெற உள்ளது. அஞ்சல் வாடிக்கையாளர்கள் தங்கள் குறைகளை தணிக்கை அலுவலர், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு செப்.25க்குள் நேரிலோ, தபால் மூலமாகவோ அனுப்பலாம். மேலும் செப். 26ல் நடக்கும் குறைதீர் முகாமில் பங்கேற்கலாம் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகளைக் கண்காணிக்க மாவட்ட வாரியாக அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித் துறையில் ஐஏஎஸ் தரத்தில் உள்ளவர்களை கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குனர் டி.உமா நியமிக்கப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் கோட்டராம் பாளையம் தெருவில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் கடந்த ஆக.30 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று மாநகராட்சி ஊழியர்கள் கோவிலின் முன்பகுதி மாநகராட்சி சாலையை ஆக்கிரமித்து இருப்பதாக கூறி ஜேசிபி இயந்திரம் மூலம் சுமார் ஐந்தடி அளவில் இடிதனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
காஞ்சிபுரம் அருள்மிகு சங்குபாணி விநாயகர் கோயிலில் நேற்று சங்கடஹர சதுத்தியை முன்னிட்டு, பக்தர்கள் விநாயகருக்கு அபிஷேக பொருட்கள் வாங்கி தந்து, பூஜையில் கலந்து கொண்டனர். விநாயகருக்கு அபிஷேக தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது. பக்தர்களுக்கு அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது. பக்தர்கள் விநாயக பெருமானை, அருகம்புல் சாற்றியும் பிரதட்சிணம் வந்தும் தேங்காய் உடைத்தும் பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.
பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்ட் பிஜிலி யோஜனா திட்டத்தின் கீழ், வீடுகளின் மேற்கூரையில் மானிய விலையில், சோலார் பேனல்களை நிறுவுவதற்கு https://pmsuryaghar.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், இதற்கான செயல்முறைகளை pmsuryaghar.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம், மானிய விலையில் சோலார் பேனல் அமைத்து இலவசமாக மின்சாரம் பெறலாம்.
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் இன்று நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தமிழ்நாடு சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தேர்வானவானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், எம்.எல்.ஏ எழிலரசன், மகாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.