India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சோமங்கலம் – நல்லூர் சாலையில், நேற்றிரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்துக்குரிய வகையில் வந்த வாகனத்தை மடக்கி ஆய்வு செய்தபோது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் மூட்டை மூட்டையாக இருந்தன. அதனை கைப்பற்றிய போலீசார், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கணேஷ், காட்ராம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் ஆகியோரை கைது செய்தனர். 150 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 40 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள பாதாள சாக்கடை திட்டத்தில், கழிவுநீர் வெளியேறி பிரச்னை ஏற்பட்டு வருகிறது. அவற்றை சரி செய்ய 250 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதற்காக தமிழக அரசிடம், காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது. அந்த நிதியை அரசு ஒதுக்கீடு செய்தால், பாதாள சாக்கடை பிரச்னைகளை முழுமையாக சரி செய்யப்படும் என மாநகராட்சி கமிஷனர் நரேந்திரன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம், தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் தீனா(16). இரவு நேற்று முன்தினம் இரவு சதீஷ் என்பவருடன் அரண்வாயல் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஆடியோ செட் அமைக்கும் பணிக்கு சென்றார். அங்கு, சார்ஜ் போட்டு வைத்திருந்த தனது செல்போனை எடுத்தபோது, மின்சாரம் பாய்ந்து தீனா படுகாயமடைந்தார். அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
மணிமங்கலம், அண்ணா நகரைச் சோ்ந்தவர் ராஜா(55), இவர் தன் குடும்பத்தைவிட்டு பிரிந்து திண்டிவனம் அருகே தனியாக தங்கி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா். இவர், கடந்த 21ஆம் தேதி சாரம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, சென்னை நோக்கிச் சென்ற கார் ஒன்று ராஜா மீது மோதிய நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், ஒலக்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10க்கு மேல் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில், பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் அளிக்க உள்ளூர் புகார் குழு அமைக்கப்பட வேண்டும். பணிபுரியும் இடங்களில் பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார்களை www.shebox.nic.in என்ற இணையதளத்தில் நேரடியாக பெண்கள் பதிவு செய்யலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார். ஷேர் பண்ணுங்க
அரசின் தோட்டக்கலை மூலமாக KAVIADP திட்டத்தின் கீழ் கொய்யா, சப்போட்டா போன்ற பழவகை செடிகள் 75% மானியம், மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் (MKMKS ) திட்டத்தின் கீழ் வாழை, கருவேப்பிலை, முருங்கை போன்ற தொகுப்புகள் 75% மானிய விலையில் தோட்டக்கலை அலுவலகம் மூலம் அரசு பண்ணை, விச்சந்தாங்கள், மேல்கதிர்பூர், மேல்ஒட்டிவாக்கம் பண்ணைகளில் விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம் என்று தோட்டக்கலை அதிகாரிகள் தகவல்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனு
பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தனித்திறன்களில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு காமராஜர் விருது பரிசுத் தொகையினை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். இந்த நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (செப்.24) வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 448 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், செட்டிகுளம் பள்ளத் தெருவை சேர்ந்த நிதிஷ் குமார் என்ற நபர் தங்கள் பகுதியில் குடிநீர், கழிவு நீரின் நிறத்தில் வருவதால் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறி தன்னுடன் எடுத்து வந்த குடிநீர் பாட்டிலை ஆட்சியர் முன்வைத்து சுகாதாரமான குடிநீர் வழங்க கோரிக்கை வைத்தார்.
கடந்த செப்.3ஆம் தேதி நடந்த மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ரத்து செய்யக் கூறி, கவுன்சிலர்கள் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இதற்கு நகராட்சி கமிஷனர் நவேந்திரன், அனைத்து கவுன்சிலர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கூட்டத்தில் கொண்டு வந்த 96 தீர்மானங்களில், 3 மற்றும் 4ஆவது தீர்மானங்கள் தவிர மற்ற தீர்மானங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.