India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் உட்கோட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த வெங்கடேசன் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு காஞ்சிபுரம் புதிய உதவி ஆட்சியராக அஷ்ரப் அலி மாற்றம் செய்யப்பட்டு இன்று காலை அலுவலகத்திற்கு வருகை தந்து கோப்புகளில் கையெழுத்து விட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்ய இருப்பதால் அதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ள கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, ஏரிகளில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய, 10,000 மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்துள்ளனர். அவசர தேவைக்காக, 5,000 காலி மணல் பைகளும் தயாராக வைத்துள்ளனர். டன் எடை அளவுக்கு சவுக்கு கட்டைகளும் தயாராக உள்ளன.
காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் அருகில் உள்ள 11 ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன. இதன் விவரம் வருமாறு: கோனேரிகுப்பம், திருப்பருத்திகுன்றம், கரும்படைத்தட்டை கீழ்க்கதிப்பூர், சிறு காவேரிப்பாக்கம், திம்ம சமுத்திரம், கிழம்பி, புத்தேரி, கலியனூர், வையவூர், ஏனாத்தூர் ஆகிய கிராம ஊராட்சிகள் இணைகின்றன. இதில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்தவுடன் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு விடும். ஷேர் பண்ணுங்க
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பெருநகர் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில், இன்று காலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. வங்கியில் உள்ள ஏசியில் மின்கசிவு ஏற்பட்டதால், தீ விபத்து ஏற்பட்டது. இதில், முகப்புக்கு பகுதி முழுவதும் தீயினால் எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக, முக்கிய கோப்புகளும் வங்கி உள்ளே இருந்த பணம் தப்பித்தன. இருப்பு பகுதிகளில் தீ பரவாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்னேரிக்கரை புதிய ரயில்வே மேம்பாலத்தில், சென்னையில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டு காஞ்சிபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (செப். 29) வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி, காஞ்சிபுரத்தில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், காஞ்சிபுரம் ஹோட்டல் தமிழ்நாடு, உணவகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று ஆய்வு (28.09.24) மேற்கொண்டார். மேலும், அதன் தரம், செயல்பாடுகள் குறித்து உரிமையாளர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது துறை சார்ந்த அலுவலர்கள் அவருடன் இருந்தனர்.
காஞ்சிபுரத்தில் நடந்த தி.மு.க பவள விழா பொதுக்கூட்டத்தில், கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். ஆனால் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கவில்லை. இன்று அவரது வாழ்த்துச் செய்தியின் முடிவில் “இன்றைய விழாவில் நேரில் கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என் சார்பில் இந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மையத்தார் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
திமுக பவள விழா பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்னர், அங்கு வைக்கப்பட்டுள்ள குறிப்பேட்டில், மாநில உரிமைகளை மீட்க அண்ணா வழியிலும், கலைஞர் வழியிலும் அயிராமல் உழைப்பேன் என குறிப்பிடில் கையெழுத்திட்டார்.
உள் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (செப். 28) வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி, காஞ்சிபுரத்தில் இன்று கனமழை செய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.