India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில், முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க 1 கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். விருப்பமுள்ளவர்கள், முன்னாள் படை வீரர்கள் முன்னாள் அலுவலகத்தில் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கலாம். மேலும் விவரங்களை அறிய 044-22262023 என்ற எண்ணில் அழைக்கலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்விதெரிவித்துள்ளார்.
சிஐடியு தொழிற்சங்கம் சுங்குவார்சத்திரம் சாம்சங் தொழிற்சாலை மற்றும் எஸ்எஸ் எலக்ட்ரானிக்ஸ் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக அனைத்து தொழிற்சாலை சிஐடியு தொழிற்சங்க உறுப்பினர்கள் இன்று காஞ்சிபுரத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். நேற்று 19ஆவது நாளாக நடைபெற்ற சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் இதற்கான அறிவிப்பு வெளியானது.
வாலாஜாபாத் வட்டம் நத்தநல்லூர் கிராமம் ஏரி நீரை பயன்படுத்துவோர் சங்க தேர்தலில் போட்டியிட்ட பெ. தனபால் என்பவர் வில் அம்பு சின்னத்தில் வெற்றி பெற்றார். 188 ஓட்டுகளில் 117 ஓட்டுகள் பெற்று அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (30.09.2024) ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து 451 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சி மற்றும் மாநகராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் என தெரிவித்துக் கொண்டார்.
தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளில் ஒன்றாக உள்ளது காஞ்சிபுரம் மாநகராட்சி. காஞ்சிபுரம் நகராட்சி 2021ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இது 36.14 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 51 மாமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இம்மாநகராட்சியின் எல்லைகள் விரிவுபடுத்தப்பட உள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாநகராட்சியில் புதிதாக 11 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981ன் படி அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வரும் அக்.2ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் நாள் முழுவதும் மூடப்பட வேண்டும் என கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் உட்கோட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த வெங்கடேசன் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு காஞ்சிபுரம் புதிய உதவி ஆட்சியராக அஷ்ரப் அலி மாற்றம் செய்யப்பட்டு இன்று காலை அலுவலகத்திற்கு வருகை தந்து கோப்புகளில் கையெழுத்து விட்டு பொறுப்பேற்றுக் கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்ய இருப்பதால் அதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ள கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, ஏரிகளில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய, 10,000 மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்துள்ளனர். அவசர தேவைக்காக, 5,000 காலி மணல் பைகளும் தயாராக வைத்துள்ளனர். டன் எடை அளவுக்கு சவுக்கு கட்டைகளும் தயாராக உள்ளன.
காஞ்சிபுரம் மாநகராட்சியுடன் அருகில் உள்ள 11 ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன. இதன் விவரம் வருமாறு: கோனேரிகுப்பம், திருப்பருத்திகுன்றம், கரும்படைத்தட்டை கீழ்க்கதிப்பூர், சிறு காவேரிப்பாக்கம், திம்ம சமுத்திரம், கிழம்பி, புத்தேரி, கலியனூர், வையவூர், ஏனாத்தூர் ஆகிய கிராம ஊராட்சிகள் இணைகின்றன. இதில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்தவுடன் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு விடும். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.