Kanchipuram

News October 5, 2024

12,925 வீடுகள் வெள்ளத்தில் சிக்க வாய்ப்பு

image

காஞ்சிபுரத்தில் மழை வெள்ள பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்பு இருப்பதாக, 72 இடங்களில் 12,925 வீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்பகுதிகளை, துணை கலெக்டர்கள் நிலையிலான அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2022ஆம் ஆண்டில் மாண்டல், 2023ஆம் ஆண்டில் மிக்ஜாம் புயலால் காஞ்சிபுரம் மிகவும் பாதிக்கப்பட்டதால் அந்த நிலை வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

News October 5, 2024

கணவன் மீது வெந்நீரை ஊற்றியதில் படுகாயம் அடைந்த கணவன் சிகிச்சை பலனின்றி பலி

image

சோமங்கலம் அருகே புதுநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவா (28). இவரது மனைவி முத்துசெல்வி (26). தேவா கட்டிடம் கட்டும் வேலை செய்து வந்தார். தேவாவுக்கு குடிப்பழக்கம் உள்ளதால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்படும். இதே போல் கடந்த 30ம் தேதி சண்டை ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திரமடைந்த மனைவி கொதிக்கும் தண்ணீரை எடுத்து கணவர் மீது கொட்டினார் இதில் படுகாயம் அடைந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

News October 5, 2024

காஞ்சிபுரத்தில் இன்று மின்தடை அறிவிப்பு

image

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (அக்.5) காலை 9 மணி முதல் 3 வரை காஞ்சிபுரத்தில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நகரம், பல்லவர்மேடு, வெள்ளைகேட், காரைப்பேட்டை, கூரம், கீழம்பி, திம்மசமுத்திரம், அசோக் நகர், ஏனாத்துர், வையாவூர், இந்திரா நகர் மற்றும் வேளியூர் துணை மின் நிலையங்களைச் சேர்ந்த கிராமங்களில் மின்தடை ஏற்படும். பொதுமக்கள் முன்னதாகவே மின்சாரத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

News October 5, 2024

தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட முடிவு

image

ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 20 நாட்களுக்கு மேலாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், 5ஆம் தேதி அன்று ஊழியர்கள் குடும்பத்தாருடன் காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட வணிகர் வீதி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

News October 4, 2024

சிறந்த நெசவாளர் மற்றும் சிறந்த வடிவமைப்பாளர்களுக்காக விருது

image

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடமிருந்து கைத்தறி துறை சார்பில், சிறந்த நெசவாளர் மற்றும் சிறந்த வடிவமைப்பாளர்களுக்காக சான்றிதழ் மற்றும் காசோலையினை பெற்ற நெசவாளர்கள் இன்று (04.10.2024) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர். உடன் கைத்தறி துறை துணை இயக்குநர் ச.மணிமுத்து உள்ளார்.

News October 4, 2024

காஞ்சியில் ஓய்வூதியர் குறைதீர்வு கூட்டம்.

image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய மைய கூட்டரங்கில், ஓய்வூதியர் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சத்யா, கருவூல அலுவலர் அருண்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் ஆகியோர் உள்ளனர்

News October 4, 2024

சாம்சங் தொழிற்சாலையில் சட்டவிரோத உற்பத்தி?

image

ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் பிரபல சாம்சங் தொழிற்சாலையில், தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சாம்சங் ஆலையில் சட்டவிரோத உற்பத்தி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி துணை இயக்குனர் உணவு மற்றும் பாதுகாப்பு தொழிற்சாலை அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது.

News October 4, 2024

வல்லக்கோட்டை கோயிலில் நடிகர் சரவணன் தரிசனம்

image

காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில், இன்று காலை நடிகர் சரவணன் வருகைதந்து மூலவர், வள்ளி, தெய்வானை, சமேத சுப்பிரமணிய சுவாமியை அர்ச்சனை செய்து வழிபட்டார். பிறகு ஒவ்வொரு சந்நிதியாக சென்று வணங்கினார். அவருக்கு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

News October 4, 2024

அரசு இசைப் பள்ளியில் சேர அழைப்பு

image

தமிழக அரசு கலை பண்பாட்டு துறையில், காஞ்சிபுரம் மாவட்ட அரசு இசைப்பள்ளி சதாவரம் பகுதியில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில், விஜயதசமியை முன்னிட்டு நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக இசைப்பள்ளி தலைமையாசிரியர் ரமணி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற அல்லது தேர்ச்சி தவறிய இசை ஆர்வம் உள்ள மாணவர்கள் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 4, 2024

டிசம்பரில் புத்தகத் திருவிழா நடத்த ஆலோசனை

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2022-2023 ஆகிய இரு ஆண்டுகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் சங்கம் சார்பாக, புத்தக திருவிழா நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, மூன்றாவது ஆண்டாக 2024ஆம் ஆண்டிலும் புத்தக திருவிழா நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கேற்ப வரும் டிசம்பர் மாதம் அரையாண்டு விடுமுறை காலத்தில் புத்தக திருவிழா நடத்த மாவட்ட உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!