India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு நாளை முதல் அஞ்சல் வார விழா தொடங்க உள்ளது. நாளை (அக்.7) தபால் தினம், நாளை மறுதினம் (அக்.8) தபால் தலைகள் தினம், அக்.9ஆம் தேதி சர்வதேச தபால் தினம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் தெரிவித்தார். இதில் கலந்து கொண்டு பயனடையுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்திரமேரூர் அருகே உள்ள ஒட்டந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(35). இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும், 3 வயதில் பெண் குழந்தையும் உள்ளன. இவர், மாங்கல் பகுதி சிப்காட் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 27ஆம் தேதி காட்டுப்பாக்கம் சாலையில், இறந்த நிலையில் கிடந்தார். போலீசார் விசாரணையில் சொத்து தகராறு காரணமாக அவரது பெரியப்பா கூலி படையை வைத்து முருகனை கொலை செய்தது தெரிந்தது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் 53ஆவது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி காஞ்சிபுரத்தில் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறும் பொது கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவருமான அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற இருப்பதாக அக்கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை சம்பந்தமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக அமைச்சர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
திருபெரும்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பரந்தூர் கிராமத்தில் 2ஆவது பசுமை விமான நிலையம் அமைவதை கண்டித்து, நேற்றிரவு, 13 கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாய மக்கள், விவசாய நிலங்களை வழங்க மாட்டோம், நீர்நிலைகளை வழங்க மாட்டோம் என்று கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 24ஆவது நாளாக எச்சூர் பகுதியில் இன்று 1000க்கும் மேற்பட்ட தங்களது குடும்பத்துடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தீபாவளிக்கு வழங்கக்கூடிய போனஸ் நிறுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் சாம்சங் ஆலை தொழிலாளர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தும் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், தொழிலாளர்களின் பிரச்சனை குறித்து ஆராய்ந்து விரைந்து தீர்வு காண வேண்டும் என அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், டி.ஆர்.பி. ராஜா ஆகியோருக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எருமையூர் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில், அடையாளம் தெரியாத சுமார் 45 வயது மதிக்க தக்க ஆண் நபர் கிணற்றில் மூழ்கி அழுகிய நிலையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதனை அறிந்த சோமங்கலம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, அழுகிய நிலையில் காயத்துடன் இருந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனை அனுப்பினர். பின்னர், அவர் யார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார், மாத்துாரில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஒரகடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, ஒரகடம் போலீசார் நேற்று முன்தினம் கண்காணிப்பில் ஈடுபட்டபோது பள்ளிக்கு அருகே நின்று ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார். விசாரணையில் கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த உ.பி.யைச் சேர்ந்த 20 – 34 வயதுடைய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கும் சாம்சங் தொழிற்சாலைக்கு எதிராக, தொழிற்சாலை ஊழியர்கள் கடந்த சில நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நிலையில், இன்று காஞ்சிபுரம் வணிகர் வீதியில் குடும்பத்துடன் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், போலீசார் அனுமதி மறுத்தால் போராட்டம் ரத்து செய்து, எழுச்சூர் பகுதியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
Sorry, no posts matched your criteria.