Kanchipuram

News October 8, 2024

1 கிலோ தக்காளி 80 ரூபாய்க்கு விற்பனை

image

ஆந்திரா உள்ளிட்ட மாவட்டங்களில் விளையும் தக்காளி காஞ்சிபுரம் சந்தைகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையால் ஆந்திராவில் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரம் சந்தைக்கு தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் 1 கிலோ தக்காளி 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில நாட்களில் தக்காளி விலை 100 ரூபாயை தாண்டும் நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

News October 8, 2024

அமைச்சர் அன்பரசன் தலைமையிலான கூட்டம் ரத்து

image

காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், அமைச்சர் அன்பரசன் மாதந்தோறும் 2 செவ்வாய்க்கிழமைகளில் குறைதீர் கூட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில், அக்டோபர் மாதத்திற்கான முதல் கூட்டம் இன்று நடைபெற இருந்தது. ஆனால், அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுவதால், அமைச்சர் குறைதீர் கூட்டம் நடைபெறாது என்றும், வரும் 15ஆம் தேதி குறைதீர் கூட்டம் நடைபெறும் என கலெக்டர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். ஷேர் பண்ணுங்க

News October 8, 2024

அரசு பேருந்து மோதி தாய், மகன் பலி

image

சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ (32). தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று தனது பைக்கில் ஜி.எஸ்.டி., சாலை – ஒரகடம் சாலை சந்திப்பில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, திருவண்ணாமலையில் இருந்து அடையாறு நோக்கி சென்ற அரசு பேருந்து பைக் மீது மோதியது. இதில், ஜெயஸ்ரீ மற்றும் அவரது மகன் ஆலன் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

News October 8, 2024

“பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை”

image

சென்னையில் நேற்று அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் சிஐடியு சௌந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பில் பேட்டி அளித்தார். அப்போது, “சாம்சங் ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக |அமைச்சர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. எங்களது கோரிக்கைகளை கேட்ட அமைச்சர்கள், நிர்வாகத்திடம் பேசுவதாக உறுதியளித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.

News October 8, 2024

சாம்சங் விவகாரத்தில் நாளை முடிவு தெரியும் – அமைச்சர் அன்பரசன்

image

ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் ஊதிய உயர்வு மற்றும் தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் ஆலை நிர்வாகத்தினருடனான பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது. நாளை முடிவு தெரியும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி

News October 7, 2024

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி

image

மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்ற (அக்.6) விமானப்படை சாகச நிகழ்ச்சியின் போது 5 பேர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி அளிப்பதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

News October 7, 2024

காஞ்சிபுரத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

லட்சத்தீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (அக்.7) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால், வெளியே செல்லும் மக்கள் குடையை எடுத்துச் செல்லுங்கள்.

News October 7, 2024

சாம்சங் தொழிலாளா்கள் போராட்டம் முடிவுக்கு வருமா?

image

காஞ்சிபுரம் சுங்குவாா்சத்திரத்தில் இயங்கிவரும் சாம்சங் நிறுவன மேலாளா்களுடன் நேற்று தமிழக அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இது குறித்து அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, நிலுவையில் உள்ள பிரச்னைகளைத் தீா்க்கப் பயனுள்ள உரையாடலை நடத்தினோம். சாம்சங் நிா்வாகத்தினரும் அவா்களின் ஊழியா்களும் இணைந்து, எல்லா தரப்புக்கும் பயனுள்ள ஒரு நல்ல முடிவை எட்டுவாா்கள் என உறுதியுடன் நம்புவதாக தெரிவித்துள்ளாா்.

News October 6, 2024

முதல்வர் கோப்பை; கால்பந்தில் காஞ்சிபுரம் முன்னேற்றம்

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவிலான முதல்வர் கோப்பை போட்டி சென்னை , கோவை,மதுரை, திருச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகிறது. இதில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில் காஞ்சிபுரம், சேலம், தர்மபுரி,திருப்பூர்,மதுரை,திருச்சி மாவட்ட அணிகள் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றிக்கு தகுதி பெற்றுள்ளன.

News October 6, 2024

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: வைகோ கருத்து

image

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிக் நிறுவனத் தொழிலாளர்கள் 4ஆவது வாரமாக, வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதில், தொழிலாளர்களின் முக்கியக் கோரிக்கையான சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை, தமிழ்நாடு தொழிலாளர் துறை உடனடியாக பதிவு செய்து சான்றிதழ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!