Kanchipuram

News October 9, 2024

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்த தடையில்லை

image

தொடர் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட சாம்சங் தொழிலாளர்களை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் மறுத்துவிட்டதால், அவர்கள் விடுவிக்கப்பட்டனர். மேலும், சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த தடை இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

News October 9, 2024

கால்நடை விவசாயிகளுக்கு இலவச பயிற்சி

image

காஞ்சி எனாத்தூரில் உள்ள தமிழ்நாடு அரசு கால்நடை துறை பயிற்சி மையத்தில் நாளை (10.10.2024) காலை 11 மணிக்கு ஜப்பானிய காடை வளர்ப்பு பற்றி முனைவர் Dr பிரேம வள்ளி, பயிற்சி அளிக்க உள்ளார். இதில் காடை வகைகள், அதன் வளர்ப்பு முறைகள் மற்றும் நோய் தடுப்பு முறைகள் ஆகியவை தொடர்பாக ஆலோசனைகளை வழங்க உள்ளார். வேளாண் பெருமக்கள், பொதுமக்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

News October 9, 2024

போலீசார்- சாம்சங் ஊழியர்கள் இடையே தள்ளுமுள்ளு

image

சங்கார்ச்சத்திரம் அருகே இயங்கி வரும் சாம்சங் நிறுவனத்தின் ஊழியர்கள், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை பந்தல் அகற்றப்பட்ட போதிலும், ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போலீசார் அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தியபோது, இரு தரப்புக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், இரு ஊழியர்கள் மயக்கமடைந்தனர். அவர்களை அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

News October 9, 2024

சாம்சங் ஊழியர்கள் வலுக்கட்டாயமாக கைது

image

சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள், பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்-நிறுவனம்-அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முழுமையான தீர்வு எட்டப்படாத நிலையில், இன்றும் போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்ட பந்தல் அகற்றப்பட்ட போதிலும், போராட்டம் நடத்தி வருவதால் போலீசார் வலுக்கட்டாயமாக ஊழியர்களை கைது செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

News October 9, 2024

சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

image

இ.டி.ஐ.ஐ. தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், அகமதாபாத் நிறுவனத்துடன் இணைந்து, “தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம்”, என்ற தலைப்பில் ஓராண்டு சான்றிதழ் படிப்பைத் தொடங்கவுள்ளது. அகமதாபாத் பாடத் திட்டத்தை தீர்மானிக்கும், பாடத்தின் ஒரு பகுதி அவர்களின் பேராசிரியர்களால் நேரடியாக நடத்தப்படும். இந்த வகுப்புகள் வரும் அக்டோபர் மாதம் 14ஆம் தேதி தொடங்குகிறது.

News October 9, 2024

சுற்றுலா பேருந்து – பைக் மோதி விபத்து: ஒருவர் பலி

image

நெமிலி, சிறுணமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன் (25). இவர், பைக்கில் தனது நண்பர் அய்யப்பனுடன் நேற்று முன்தினம் அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். கன்னியம்மன் கோவில் அருகே சென்றபோது, எதிரே வந்த சுற்றுலா பேருந்து அவர் மீது மோதியது. இதில், அன்பழகன், அய்யப்பன் ஆகிய இருவரும் காயமடைந்தனர். இருவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அன்பழகன் நேற்று உயிரிழந்தார்.

News October 9, 2024

காஞ்சி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு

image

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுகவின் அவசர செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம், வரும் 13ஆம் தேதி ஆலந்தூரில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் பிறந்தநாள் விழா மற்றும் 29ஆம் தேதி அன்று வாக்காளர் பட்டியல் வெளியிட்டவுடன், வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது என அமைச்சர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

News October 9, 2024

தொழில் முனைவோர் மேம்பாட்டு படிப்பில் சேரலாம்

image

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தொடங்க உள்ள ஓராண்டு சான்றிதழ் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு, இடிஐஐ தலைமை அலுவலக எண்களில் (8668107552, 8668101638, 9677835172) தொடர்பு கொள்ளலாம். அனைத்து விவரங்களை இந்த https://www.editn.in என்ற இணையதளத்தில் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 9, 2024

இதனால் ஊதியம் பாதிக்கப்படும்: அமைச்சர்

image

தலைமை செயலகத்தில், நேற்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பி.ராஜா, “சாம்சங் ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக 7 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. எதற்காக போராட்டத்தை நீட்டிக்கிறார்கள் என்று தெரியவில்லை? இதனால் அவர்கள் ஊதியம் பாதிக்கப்படும். பேச்சு வார்த்தை நடத்தியும் போராட்டம் நடத்துகிறார்கள்” என்றார்.

News October 9, 2024

நவராத்திரி 2024 விழாவில் கலந்து கொண்ட தமிழிசை சௌந்தரராஜன்

image

காஞ்சிபுரம் சங்கரா செவிலியர் கல்லூரியில் ஶ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் பீடாதிபதி ஜகத்குரு ஶ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நவராத்திரி 2024 விழா நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். மேலும் நீலகிரி மாவட்டம் பழங்குடியின மக்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து பழங்குடியின சகோதர, சகோதரிகளுக்கு இசைக்கருவிகள் வழங்கினார்

error: Content is protected !!