India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள், எச்சூர் கூட்டுரோடு அருகே சிஐடியு மாநில தலைவர் சௌந்திரராஜன், மாவட்டச்செயலாளர் முத்துகுமார் தலைமையில் நேற்று போராட்டம் நடத்தினர். பந்தல் அகற்றப்பட்டதால் ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 625 பேரை கைது செய்து பின் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் தெரிவித்துள்ளது.
சுங்குவார்சத்திரம் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள், கடந்த 9ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, பலமுறை சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றும் சுமுகமான முடிவு இன்னும் எட்டாததால், தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியபோதும், சுங்குவார்சத்திரத்தில் இன்று போராட வந்த சாம்சங் ஊழியர்கள் 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை திட்டத்தின் கீழ், கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தினை நீட்டித்து 2024-2025 முதல் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் 50 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் வீதம் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் தெரிந்து கொள்ள 044-29998040 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
காஞ்சிபுரத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம், கடந்த ஆக.28ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் இணைய வழியாகவும், இந்திய தேர்தல் ஆணையத்தின் voters.eci.gov.in என்ற இணையதளம் மூலம் நேரடியாகவும் விண்ணப்பம் செய்யலாம். இதற்காக அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், நவ.9, 10, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என கலெக்டர் கூறினார்.
பரணிபுத்தூர், மாங்காடு சாலையில் உள்ள சக்தி பேலஸ் மண்டபத்தில், புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கும் விழா மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், பாராளுமன்ற, உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில், பொதுமக்கள் பலருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட உள்ளன.
தமிழக முழுவதும் பள்ளிக்கல்வித்துறையால் 45 தலைமை ஆசிரியர்கள், தொடக்கக்கல்வி அலுவலராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் தேவரியம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்த சி.ஏழில் என்பவருக்கு, காஞ்சிபுரம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.
சாம்சங் தொழிலாளர் விவகாரத்தில், சுமுகத் தீர்வு காண வேண்டும் என்றும், தொழிலாளர்கள், நிர்வாகம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் சுமுக தீர்வு காண வேண்டும் என்றும் இந்தியத் தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) தெரிவித்துள்ளது. பொருளாதார நடவடிக்கைகள் முடங்காத வகையில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், தமிழ்நாடு தொழில் துறைக்கு உகந்த மாநிலம் என்ற நற்பெயர் தொடர வழிவகுக்க வேண்டும் எனத் தெரிவித்தது.
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர், கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 35 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க
ஒழுக்கோல்பட்டு கிராமத்தில் உள்ள லட்சுமியம்மன் கோவில் அருகே, பழமை வாய்ந்த சிலை சேதமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இச்சிலை, தலை கூம்பு வடிவில் உள்ளது. கரந்த மகுட கவசம் மற்றும் முகம், காது ஆகிய பகுதிகளில், ஆபரணங்கள் அணியப்பட்டு உள்ளன. இது, 7ஆம் நூற்றாண்டின் முருகர் சிலை என வரலாற்று மத்திய தொல்லியல் துறை உதவி ஆய்வாளர் ரமேஷ், கல்வெட்டு ஆய்வாளர் நாகராஜன் ஆகியோர் உறுதிப்படுத்தினர்.
காஞ்சிபுரம் அடுத்த மேல் ஒட்டிவாக்கம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்டம் முகாமில் 162 பயனாளிகளுக்கு ரூ.1.84 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதனை, காஞ்சி மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வழங்கினர்.
Sorry, no posts matched your criteria.