Kanchipuram

News October 11, 2024

தொழிலாளர்கள் பிரச்னையில் கவனம் தேவை: அர்ஜுன் சம்பத்

image

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்ய, இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்று வருகை தந்தார். கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் உள்பட நிர்வாகிகள் பலர் அவருடன் வந்திருந்தனர். தரிசனத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவா், “சாம்சங் தொழிலாளர்கள் பிரச்னையை திமுக அரசு கவனமாக கையாவில்லையெனில் சாம்சங் தொழிற்சாலை வேறு மாநிலத்துக்கு சென்று விடலாம்” என்றாா்.

News October 11, 2024

ரத்தன் டாடா படத்தை வரைந்த காஞ்சிபுரம் ஓவியர்

image

பிரபல தொழில் அதிபரும், டாடா நிறுவனத்தின் தலைவருமான ரத்தன் டாடா, நேற்று முன்தினம் உடல்நல குறைவால் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, காஞ்சிபுரம் அடுத்த அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரபல ஓவியர் சங்கர், ரத்தினம் டாட்டா புகைப்படத்தை கருப்பு மையால் தத்துரூபமாக வரைந்துள்ளார். அவரது இந்தச் செயல் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

News October 11, 2024

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை

image

காஞ்சிபுரத்தில், தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ், 10ஆம் வகுப்பு தோல்வி – ரூ.200, தேர்ச்சி – ரூ.300, +2 தேர்ச்சி அல்லது பட்டயப்படிப்பு – ரூ.400, பட்டப்படிப்பு தேர்ச்சி – ரூ.600 மாதந்தோறும் வழங்கப்படுகிறது. இதில், பயன்பெற விருப்பமுள்ளவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அலல்து www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்தை பெற்றுக் கொள்ளலாம். ஷேர்

News October 11, 2024

சாம்சங் ஊழியர்கள் தொடர் போராட்டம்!

image

சுங்குவார்ச்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் நிறுவனத்தின் ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. பேச்சு வார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததால், நாள்தோறும் பணியை புறக்கணித்து போராடி வருகின்றனர். ஊழியர்களின் போராட்டத்திற்கு, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்து வருகின்றன. இதனால், மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

News October 11, 2024

தன்வந்திரி பாபாவுக்கு பாலாபிஷேகம்

image

காஞ்சிபுரம், ஓரிக்கை, பேராசிரியர் நகர் பகுதி-2ல் குபேர விநாயகர் கோயில் உள்ளது. நேற்று காலை 8:30 மணிக்கு தன்வந்திரி பாபாவுக்கு பாலாபிஷேகம், அலங்காரம் & ஆரத்தி சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து அனைத்து தெய்வங்களுக்கும் குபேர விநாயகர், கோடீஸ்வரர், பகவதி புவனேஸ்வரியம்மன், பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருமாரியம்மன், அய்யப்பன், பாலமுருகன், கால பைரவர் சிறப்பு பூஜை செய்யபட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

News October 10, 2024

சாம்சங் தொழிலாளர்களை சந்தித்த சீமான்

image

ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரத்தில் போராடி வரும் சாம்சங் தொழிலாளர்களை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது, தொழிலாளர்களின் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என்றும் அவர்களிடம் சீமான் உறுதியளித்தார். இதில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். இதனால், மீண்டும் பேச்சு வார்த்தைக்கு அழைக்க வாய்ப்புள்ளத.

News October 10, 2024

நகரீஸ்வரர் கோயிலில் 21ஆம் தேதி கும்பாபிஷேகம்

image

காஞ்சிபுரம் கிழக்கு ராஜ வீதி பேருந்து நிலையம் அருகில், நகரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை பராமரப்பில் உள்ள இக்கோயில், பல்வேறு திருப்பணிகளுடன் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி வரும் 18ஆம் தேதி நவக்கிரஹ ஹோமம், தனபூஜை, சாஸ்த்ர ஹோமமம், யாகசாலை நிர்மாணம் உள்ளிட்டவை நடக்கிறது. வரும் 21ஆம் தேதி மூலஸ்தானம் மற்றும் பரிவாரங்களுக்கு கும்பாபிஷேகம் தொடங்குகிறது.

News October 10, 2024

மக்கள் தொடர்பு முகாம்: 45 மனுக்கள் பெறப்பட்டன

image

அக்டோபர் மாதத்திற்கான மக்கள் தொடர்பு முகாம், காஞ்சிபுரம் ஒன்றியத்தில் உள்ள மேல்ஒட்டிவாக்கம் கிராமத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 45 மனுக்கள் பெறப்பட்டன. பின், மனுக்கள் தீர்வு காணப்பட்டு 162 பயனாளிகளுக்கு ரூ.1.84 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கலைச்செல்வி வழங்கி சிறப்பித்தார்.

News October 10, 2024

சாம்சங் ஊழியர்கள் 625 பேர் மீது வழக்கு

image

சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள், எச்சூர் கூட்டுரோடு அருகே சிஐடியு மாநில தலைவர் சௌந்திரராஜன், மாவட்டச்செயலாளர் முத்துகுமார் தலைமையில் நேற்று போராட்டம் நடத்தினர். பந்தல் அகற்றப்பட்டதால் ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 625 பேரை கைது செய்து பின் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் தெரிவித்துள்ளது.

News October 10, 2024

போராட்டத்தில் ஈடுபட வந்த சாம்சங் ஊழியர்கள் 30 பேர் கைது

image

சுங்குவார்சத்திரம் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள், கடந்த 9ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, பலமுறை சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றும் சுமுகமான முடிவு இன்னும் எட்டாததால், தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியபோதும், சுங்குவார்சத்திரத்தில் இன்று போராட வந்த சாம்சங் ஊழியர்கள் 30க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!