India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மற்றும் ஆதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மாநகராட்சிக்கு உட்பட்ட ஒளிமுகமது பேட்டை, பெரியார் நகர், செவிலிமேடு, ஓரிக்கை உள்ளிட்ட பகுதிகளிலும், சுற்றுவட்டார பகுதிகளான வெள்ளைகேட், நத்தப்பேட்டை, களக்காட்டூர், வாலாஜாபாத், தாமல், பாலுசெட்டி சத்திரம், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. உங்க ஏரியாவில்?
தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், அதனை ஒட்டிய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. உத்திரமேரூர், மருதம், திருப்புலிவனம் போன்ற பல கிராமத்தில் கனமழை பெய்து வருகிறது. சாலையிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. கனமழை காரணமாக கடைகளில் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை முன்னெச்சரிக்கையாக வாங்கி வைத்துக் கொள்ளலாம்.
தலைமைச் செயலாளர் முருகானந்தம், பேரிடர் மீட்பு பணி குறித்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில் பாதுகாப்பு முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. பேரிடர் மீட்பு குழு முக்கியமான பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். குறிப்பாக, சென்னையில் மட்டும் 300 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு துரித நடவடிக்கை எடுக்க மாநகராட்சி தயார் நிலையில் உள்ளது” என்றார்.
காஞ்சிபுரத்தில் இன்று முதல் மிக கனமழை பெய்ய
உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் கண்டறியப்பட்டு, 21 பல்துறை மண்டலக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 276 ஜே.சி.பி.க்கள், 10 படகுகள், 30 ஜெனரேட்டர்கள், 250 நீர் இறைப்பான்கள், 43 மர அறுப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களும், 62 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வடகிழக்கு பருவமழை 2024 பாதிப்புகளை தடுக்கும் வகையில், தன்னார்வலர்கள், அரசு அலுவலர்களுடன் தடுப்பு நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், வானிலை தொடர்பான செய்திகளை, வானிலை ஆய்வு மையம், தமிழ்நாடு அரசு வெளியிடும் TN-ALERT எனும் செயலி மூலம் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீட்டை பொதுமக்கள் பின்தொடருமாறும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கலெக்டர் கலைச்செல்வி கூறினார்.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்டங்களுக்கு நாளை (16ஆம் தேதி) ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும், இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சிதுறை, நெடுஞ்சாலை, மின்சாரம் உள்ளிட்ட 11 துறையைச் சார்ந்த அலுவலர்களைக் கொண்டு 21 மண்டலக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவினர் பருவமழை காலங்களில் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் தங்கியிருந்து மீட்பு பணிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டு உள்ளது. ஷேர் பண்ணுங்க
பேரிடர் தொடர்பான பாதிப்புகள், தீர்வுகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கைத்தறி துணை அமைச்சரும், காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான காந்தி கலந்து கொண்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஞ்சிபுரத்தில் 24 மணி நேரமும் அலுவலர்கள் பணியில் இருப்பார்கள். 276 ஜேசிபி இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைகளும் செயல்படும் என்றார்
சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில், தொழிற்சங்கத்தை பதிவு செய்ய உத்தரவிடக்கோரி வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்ததில் நாளை மறுதினம் விசாரிப்பதாக நீதிபதி ஆர்.என். மஞ்சுளா தெரிவித்தார். மேலும் சாம்சங் என்ற பெயரை பயன்படுத்த, நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தமிழக அரசு பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் பருவமழையை எதிர்கொள்ளும் பொருட்டு பாதுகாப்பு முன்னேற்பாட்டு நடவடிக்கைகளாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டு 24 மணிநேரமும் செயல்பட்டுவருகிறது, 15 காவல் ஆளிநர்களைக் கொண்ட நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது, மேலும் காவல் கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண்கள் 044-27236111 மற்றும் 9498181232 எண்கள் அறிவிப்பு
Sorry, no posts matched your criteria.