India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அதிமுகவின் 53ஆவது ஆண்டு விழா முன்னிட்டு காஞ்சிபுரத்தில் 17ஆம் தேதி பொது கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் பலத்த மழை இருக்கக்கூடும் என எச்சரித்துள்ளதால் 17ஆம் தேதி நடைபெற இருந்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில் இன்று முதல் அதிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்த நிலையில் கன மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டங்களில் அனைத்து பகுதியிலும் அத்தியாவசிய சேவை துறைகள் தவிர பிற அரசு அலுவலகங்களுக்கு நாளை (16.10.2024) விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது
அதிகனமழை காரணமாக நாளை புதன் கிழமை (16.10.2024) அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 7 மணி வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை மற்றும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 2 நாட்கள் கழித்து 18ஆம் தேதி முதல் மழை படிப்படியாக குறையத் தொடங்கிவிடும் என்று தென்மண்டல் வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். தெரிவித்தார்.
வரும் அக்.17ஆம் தேதி அன்று அதிமுகவின் 53ஆம் ஆண்டு தொடக்க விழாவில், காஞ்சிபுரம் மாநகருக்கு அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் வருவதாக இருந்தது. இந்த நிலையில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஆகியவை மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், தேதி குறிப்பிடாமல் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை நீடிக்கும். இதன் விளைவாக, வடகிழக்கு பருவமழையின்போது வெள்ளம் மற்றும் புயல் போன்ற மோசமான வானிலை நிகழ்வுகளை சமாளிக்க, கடந்தாண்டு அனுபவத்தின் அடிப்படையில் பாதிக்கப்படக்கூடிய கிராமங்களில் அதிக கவனம் செலுத்தி தேவையான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்ய அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டங்களில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில், 25 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அதிலுள்ள , 105 ஏரிகள் 75% – 100% , 188 ஏரிகள் 50% – 75%, 275 ஏரிகள் 25% – 50%, 315 ஏரிகள் 25% கீழ் நிறைந்திருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ள்ளது.
காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை அறிவிப்பு வெளியானத் குறித்து, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், “சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை நிலையம் அறிவித்துள்ள நிலையில், முதலமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, மக்களை வெள்ள அபாயத்திலிருந்து காக்க வேண்டுமென்று வலியுறுத்திகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: காஞ்சிபுரம் – 15.60 மி.மீ., ஸ்ரீபெரும்புதூர் – 16.20 மி.மீ., உத்திரமேரூர் – 34 மி.மீ., வாலாஜாபாத் – 25 மி.மீ., குன்றத்தூர் – 16.2 மி.மீ., செம்பரம்பாக்கம் – 21 மி.மீ., என காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 128 மில்லி மீட்டர் மழை பெய்த பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இம்முகாமில் ,தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, 1000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர். இதில், பட்டதாரிகள், டிப்ளமோ, ஐடிஐ, 12 மற்றும் 10ஆம் வகுப்பு படித்தவர்களை தேர்ந்தெடுக்க உள்ளதாக என கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.