India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தாழ்வான இடங்களில் தேங்கியுள்ள மழைநீர், கழிவுநீராக மாறக் கூடிய சூழல் எழுந்துள்ளது. இதனால், நோய்க்கிருமிகள் பரவலைத் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதைக் கருத்தில் கொண்டு நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று குடிநீர் விநியோகத்தின் தரத்தை உறுதி செய்யவும் அறிவுறுத்தினர்.
மாதத்தின் 3ஆவது வியாழக்கிழமை என்பதால், காஞ்சிபுரம் வடக்கு கோட்ட மின் நுகர்வோர் கூட்டம் இன்று (அக்.17) நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், காலை 11 மணிக்கு இந்தக் கூட்டமானது நடைபெற உள்ளது. இதில், மின் நுகர்வோர்கள் பங்கேற்று, தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டார நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
பலத்த மழை காரணமாக, காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்கள் அடங்கிய வடக்கு மண்டலத்தில் தீ விபத்து தொடர்பான 16 அழைப்புகளும், உதவிகள் கேட்டு 74 அழைப்புகளும் நேற்று முன்தினம் தீயணைப்பு படையினருக்கு வந்தன. அதில், 43 அழைப்புகள் பாம்புகள் வீடுகளுக்குள்ளும், குடியிருப்பு பகுதிகளுக்கும் புகுந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு படையினர் 43 பாம்புகளை பிடித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என மாட்ட கலைச்செல்வி தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மற்றும் நேற்று முன்தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்று மாலை ஓரளவு மழை சீரானதால், இன்று வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும். ஷேர் பண்ணுங்க
சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள சாம்சங் இந்தியா தொழிற்சாலை நிறுவன ஊழியர்கள் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, நேற்று நடைபெற்ற பேரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு, இன்று முதல் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்க பருவமழை தொடங்கி கடந்த இரு தினங்களாக காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் நாளை காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ளது.
சென்னைக்கு தென்கிழக்கே 280 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரையை கடக்க உள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை (அக்.17) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 35 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 130 ஏரிகள் 75%-100%, 220 ஏரிகள் 50%-75%, 266 ஏரிகள் 25%-50%, 257 ஏரிகள் 25% நிறைந்திருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட நீர்வளத்துறையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (அக்.15) காலை 6 மணி முதல் இன்று (அக்.16) காலை 6 மணி வரை பெய்த மழையின் அளவு: காஞ்சிபுரம் தாலுகா 33 மி.மீ., உத்திரமேரூர் தாலுகா 24.4 மி.மீ., வாலாஜாபாத் மி.மீ., ஸ்ரீபெரும்புதூர் 59.2 மி.மீ., குன்றத்தூர் 68.7 மி.மீ., செம்பரம்பாக்கம் 85 மி.மீ., என மொத்தம் 299.3 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. சராசரியாக 49.9 மி.மீ., மழை என காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.