India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் 10 மாவட்டங்களில், மொபைல் டவர்களில் பொருத்தியிருந்த முக்கிய தொலைத்தொடர்பு சாதனங்கள் திருடுபோவது தொடர் கதையாக இருந்து வந்தது. இந்நிலையில், காஞ்சிபுரம் எஸ்.பி. சண்முகம் தலைமையிலான 2 தனிப்படை போலீசார் உத்தரபிரதேசம் சென்று தீவிர சோதனை செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இவ்வழக்கில், முக்கிய குற்றவாளிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், புதிதாக 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாதாந்திர உதவித்தொகை!
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது.
SSLC தேர்ச்சி பெறாதவர்களுக்கு ₹200,
SSLC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹300,
HSC தேர்ச்சி பெற்றவர்களுக்கு ₹400, பட்டதாரிகளுக்கு ₹600 வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ₹600 ₹1000 வரை உதவித்தொகை கிடைக்கும்.
தமிழக அரசு அறிவிப்பு.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு தாட்கோ மூலமாக தளவாடங்கள் மற்றும் விநியோக சங்கிலி துறை மூலம் கிடங்கு மேலாண்மை, கிடங்கு பிக்கர் மற்றும் பேக்கர் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com மூலம் வரும் (அக்.31)க்குள் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் கனமழை பெய்த நிலையில், தற்போது காலை நேரங்களில் வெயிலும், மாலை நேரங்களில் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பெரிய காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, காஞ்சிபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களான கிஷோர் (26), ரித்தீஷ் (21), வெங்கட் ஆகியோர் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்-அப் மூலம் பழகி ஆசை வார்த்தைக்குறி பாலியல் வன்கொடுமை செய்து வந்தனர். இதுகுறித்து, சிறுமி தனது தாயிடம் தெரிவிக்க, தாய் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
கலைஞர் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக, இளம் பேச்சாளர்களை திமுக இளைஞர் அணி சார்பில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நடத்தி வருகிறது. கடந்த ஆக.17ஆம் தேதி முதல் பேச்சுப்போட்டி பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் வருகிறது. இந்நிலையில் கடந்த அக்.13 அன்று நடைபெற்ற போட்டியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் இறுதிப் போட்டிக்கு ச.பேரரசன், ச.யாசர்அரபாத், தா.ஜெயபாரதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் புத்தேரியில் வசிக்கும் நீனா (21), கம்போடியா நாட்டில் நடந்த ஆசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் கலந்து கொண்டார். அபாரமாக விளையாடி, 1 தங்கம், 2 வெள்ளி பதக்கங்கள் வென்றார். இவருக்கு நேற்று காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா பூங்கா வாக்கிங் குழு சார்பில், பூங்கா வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், வாக்கிங் குழுவினர் வீராங்கனை நீனாவை கௌரவித்து பரிசு வழங்கி பாராட்டினர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் 381 ஏரிகள் உள்ளன. இதில், ஒரு ஏரி கூட முழு கொள்ளளவை எட்டாத நிலையில் உள்ளது. மொத்த ஏரிகளில் 11 ஏரிகள் 75 சதவீதமும், 93 ஏரிகள் 50 சதவீதமும், 275 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவான நீர் இருப்பை கொண்டுள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழைக்காலம் தொடங்கியுள்ளதால், நீர் இருப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சீர்மரபினர் நலவாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு விபத்து, ஈட்டுறுதி, உதவித்தொகை உள்ளிட்ட 8 வகையான உதவிகள் வழங்கப்படுகின்றன. சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம், நாளை (அக்.24) காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில், உறுப்பினராக சேர்ந்து பயனடையலாம் என காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு கிடங்கு மேலாண்மை, கிடங்கு பிக்கர் & பேக்கர் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. கிடங்கு மேலாண்மை – டிப்ளமோ/பட்டப்படிப்பு, பிக்கர்/பேக்கர் – 10, 12ஆம் வகுப்பு & ITI படித்திருக்க வேண்டும். www.tahdco.com என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.