Kanchipuram

News November 1, 2024

காஞ்சிபுரத்தில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

காஞ்சிபுரத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மதியம் 1 மணி வரை) இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் முதல் வாரத்தில் தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் குடை அல்லது ரெயின் கோர்ட்டுடன் வெளியே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது.

News November 1, 2024

50,000 சரவெடியுடன் காமாட்சி அம்மன் வீதியுலா 

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் வீதி உலா நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. 50,000 சரவெடி வெடிக்க லட்சுமி, சரஸ்வதி தேவிகளுடன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தார். வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் அம்மனுக்கு கற்பூர ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

News November 1, 2024

இந்த தீபாவளிக்கு உங்களை மகிழ்வித்தது எது?

image

தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள், காலையிலே எண்ணேய் தேய்த்து குளித்தும், பலகாரங்கள் செய்து அதை உற்றார் உறவினர்களுக்கு கொடுத்தும், அறுசுவை உணவு சாப்பிட்டும், புத்தாடைகள் அணிந்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். புதுப் படங்கள் வெளியானதால், திரைப்படங்களை கண்டு ரசித்து உற்சாகமான தீபவாளியாக இம்முறை அமைந்தது. இதில், உங்களை மகிழ்வித்தது

News November 1, 2024

மதுக்கடையில் குவிந்த மதுப்பிரியர்கள்

image

தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் ஞாயிறு வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், காஞ்சிபுரம் டாஸ்மாக் கடையில் மது பிரியர்கள் கூட்டம் நேற்று காலை முதலே அலைமோதியது. மது பிரியர்கள் போட்டிக் போட்டுக் கொண்டு வாங்கிச் சென்றனர். இதன் மூலம் சாதாரண நாட்களைவிட பன்மடங்கு விற்பனை அதிகமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News November 1, 2024

காவலர் பயிற்சி பள்ளியில் குறைந்த விலையில் பட்டாசுகள்

image

காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை ஆயுதப்படைப் பிரிவு சார்பில், ரூ.100 – ரூ.3,500 வரை பட்டாசுப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றிலும் எத்தனை வகை பட்டாசுகள் உள்ளன என்ற விபரங்களுடன் எழுதி பட்டாசு விற்பனை படுஜோராக நடந்தது. ஏராளமான பொதுமக்கள் மற்றும் காவலர்கள் மிகக்குறைந்த விலைக்கு கிடைப்பதாகக் கூறி ஆர்வத்துடன் பட்டாசுகளை வாங்கிச் சென்றனர். பல பகுதிகளில் பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

News November 1, 2024

காஞ்சிபுரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்ககக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாக, இன்று (நவ.1) காஞ்சிபுரத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

News November 1, 2024

தீபாவளி கொண்டாட்டம் கோலாகலம்

image

காஞ்சிபுரத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்து பாரம்பரிய முறையில் கொண்டாடினர். காலையில் எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடைகள் அணிந்து, பலகாரங்கள் செய்து, அறுசுவை உணவு சமைத்து, வண்ண வண்ண வான வேடிக்கைகளுடன் கொண்டாடினர். இதனால், இரவில் காஞ்சிபுரம் மாவட்டம் ஜொலித்தபடி காணப்பட்டது. நீங்கள் எப்படி தீபாவளி கொண்டாடினீர்கள்?

News October 31, 2024

தீபாவளியை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்தில், நேற்று பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்து இருந்தது. அதன்படி, கடந்த வாரம் ரூ.200க்கு விற்பனையான 1 கிலோ மல்லிகைப்பூ, நேற்று, 1,200 ரூபாய்க்கும், ரூ.100க்கு விற்பனையான முல்லை பூ 700 ரூபாய்க்கும், ரூ.100க்கு விற்பனையான பன்னீர் ரோஜா 200 ரூபாய்க்கும், ரூ.500க்கு விற்பனையான கனகாம்பரம் பூ 1,500 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. ஷேர் பண்ணுங்க

News October 31, 2024

காஞ்சிபுரம் மக்களே கவனமாக கொண்டாடுங்க

image

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பட்டாசுகளை வெடிக்கும்போது கவனம் தேவை. பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். மேலும், கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட காஞ்சிபுரம் மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துகள்.

News October 31, 2024

குன்றத்தூர் வடக்கு ஒன்றிய நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு

image

குன்றத்தூர் வடக்கு ஒன்றியத்தில் சேர்ந்த அனைத்து கிளை நிர்வாகிகள், இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி என அனைவருக்கும் ஸ்வீட்டுகள் வழங்கி தீபாவளி வாழ்த்துகளை அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் குன்றத்தூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஏ.வந்தே மாதரம் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

error: Content is protected !!