India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காஞ்சிபுரம் மக்களே, தமிழ்நாடு அரசு, ‘முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்’ கீழ் விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சோலார் பம்புசெட்டுகளை வழங்குகிறது. அத்துடன், 5 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு, காப்பீட்டு வசதியும் செய்து தரப்படும். இதில் பயனடைய விரும்பும் நபர்கள், <

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 10337.
பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு, கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் கடந்த 4 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், 5ஆவது நாளான நேற்று(பிப்.9) வந்தவாசி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு நிலவியது. இதையடுத்து, போலீசார் 200க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்களை கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

சுங்குவார்சத்திரம் அருகே குன்னம் ஊராட்சியில் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் குடியிருப்பு பகுதி மற்றும் கல்லூரி அருகே டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், இது திறக்கப்பட்டால், சமூக விரோத செயல்கள் அதிகரிக்கும் எனவும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகும் எனக் கூறி 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மக்கள் நல்லுறவு மையத்தில், (பிப்.9) ஆட்சியர் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரசு அலுவலர்கள் அனைவரும் பங்கேற்று, கொத்தடிமை முறையை வேரறுக்க உறுதி பூண்டனர். சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி உழைப்பாளர் உரிமையை காக்க இவ்விழா அமைந்தது.

காஞ்சிபுரம் ஆட்சியரிடம் நத்தாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் வ.மணி இன்று கோரிக்கை மனு வழங்கினார். அந்த மனுவில் வாலாஜாபாத் ஒன்றியம் நத்தாநல்லூர் ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் 5 ஆண்டுகளுக்கு மேலாக முழுமையாக பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே மக்கள் சிரமத்திற்கு ஆளாவதாகவும் மாவட்ட ஆட்சியர் புதிய கிராம நிர்வாக அலுவலகம் கட்டி தருமாறு ஊராட்சிமன்ற தலைவர் வ.மணி மனு அளித்தார்
Sorry, no posts matched your criteria.