India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024 மக்களவைத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் மொத்தம் 71.55 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. வேட்பாளராக திமுக சார்பில் ஜி.செல்வம், அதிமுக சார்பில் ராஜசேகர், பாஜக சார்பில் ஜோதி வெங்கடேசன், நாம் தமிழர் சார்பில் சந்தோஷ்குமார் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்? தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Way2News-னுடன் இணைந்திருங்கள்.
காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு திடலில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, சென்னை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 16 அணிகள் போட்டியில் பங்கேற்றன. இதில், மாநில அளவில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் காஞ்சி ஹாக்கி கிளப் அணிக்கு முதல் பரிசும், சென்னை மவுன்ட் டாலர்ஸ் ஹாக்கி கிளப் அணிக்கு இரண்டாவது பரிசும் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமான, பொன்னேரிக்கரை, அண்ணா பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு, இன்று ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ் உள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வரதராஜபுரம் ஊராட்சி ராயப்பா நகர் மாற்றும் அதன் அருகில் உள்ள பல மின் கம்பங்கள் சாய்ந்த நிலையிலும் மற்றும் எலும்புக்கூடு போல் காட்சி அளிக்கிறது. மேலும் இதை குறித்து புகார் அளித்த நிலையில் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என பொது மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன் தக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் பிரசித்தி பெற்ற ஸ்ரீவைகுண்ட பெருமாள் வைகாசி உற்சவம் முன்னிட்டு இரவு சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வைகுண்ட பெருமாள் நான்கு ராஜ வீதி உலாவில் உலா வந்தது. இதில் பொதுமக்கள் தீபாராதனை காண்பித்து வழிபாடு செய்து கோவிந்தா கோவிந்தா என்ற கோசத்துடன் பெருமாளை வழிபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உயர் கல்வி பயில விரும்பும் மாற்றுத்திறனாளி மாணவ / மாணவியர்கள் பயனடையும் வகையில் குறிப்பிட்ட கல்லூரிகளில் கட்டண விலக்கு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும், விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் (தரைத்தளம்), காஞ்சிபுரம், தொலைபேசி எண் : 044 -29998040- ஐ தொடர்பு கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 1433 ஆம் பசலி ஆண்டுக்கு வருவாய் தீர்வாயம் நடத்திடவும், கிராமக் கணக்குகளை தணிக்கை செய்திடவும், வருவாய் தீர்வாய அலுவலர்களை நியமனம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், சம்மந்தப்பட்ட வட்டாட்சியரிடம் முன்னதாகவே பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் உத்திரமேரூரில் அமைந்துள்ளது வைகுண்ட பெருமாள் கோயில். இக்கோயில் பல்லவரால் கட்டப்பட்டு, சோழர்களால் விரிவுபடுத்தப்பட்டது. 1ஆம் பராந்தக சோழன் ஆட்சியில் கிராம சபைகளுக்கு பிரதிநிதிகளை ஜனநாயக முறைகளின் தேர்ந்தெடுத்ததைக் குறிக்கும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பல அரசியலைப் பார்த்த இக்கோயில் 0.5 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இக்கோயில் மண்டபத்தில் சோழர் காலக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம், சோமங்கலம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்ததின் பேரில்
சோமங்கலம் போலீஸார், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் செந்தில் ஆகியோர் கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 11 கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும் வகையில் இன்னுயிர் காப்போம் /நம்மைக் காக்கும் 48 திட்டம் தொடங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக 4737 நபர்களுக்கு ரூ.3,80,18,176/- ரூபாய் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.