India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காலண்டர் தெருவில் வசித்து வந்தவர் கஸ்துரி (62). ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், வளையாபதி, பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்றி, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, டி.எஸ்.பி., நிலையில் உள்ள அதிகாரி விசாரணையை தொடங்கி உள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், பல்பொருள் அங்காடியை, கூட்டுறவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார். இதையடுத்து, வையாவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், மினி வேன், 4 பேருக்கு விற்பனையாளர் பணிக்குரிய பணி ஆணை, 194 நபர்களுக்கு 1.92 கோடி ரூபாய் கடனுதவிகளை வழங்கினார். இதில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரத்தில் 3 வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றம் செய்து, கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி, ஊரக வளர்ச்சி முகமைக்கும், உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன், ஊரக வளர்ச்சி முகமையின் கண்காணிப்பாளராகவும், ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் முத்துசுந்தரம், குன்றத்துார் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் உள்ள சவீதா பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்கால் கனமழை பெய்தது. இந்த கனமழையால், மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மழைநீர் தேங்கியது. இதனால், தற்காலிகமாக அவசர சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டது. இதனால் கல்லூரி மாணவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு பல்வேறு பகுதிக்கு நேரடியாக செல்ல பேருந்து வசதி இல்லாததால், தாம்பரம் அல்லது பூந்தமல்லி சென்று அங்கிருந்து சென்னை மாநகர் பேருந்து, ரயில், ஆட்டோ பிடித்து செல்ல வேண்டியுள்ளது. இதனால், நேரம், பணம் விரயமாகிறது. எனவே, பொதுநலன் கருதி, சென்னையில் இருந்து, காஞ்சிபுரத்திற்கு மாநகர் பேருந்து இயக்க வேண்டும் என காஞ்சிபுரம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை, வந்தவாசி இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (58). இவர், செங்கல்பட்டு அரசு போக்குவரத்து பணிமனையில் நடத்துநராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் செங்கல்பட்டு – சித்தனக்காவூர் வரை இயங்கும் அரசு பேருந்தில் படுத்து தூங்கிய இவர், நேற்று அதிகாலை வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த சாலவாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி யார் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
காஞ்சிபுரம் – வந்தவாசி சாலையில், ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகம் இயங்கி வருகிறது. இங்கு இன்று காலை 10:30 மணி அளவில், கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்களின் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், பணிபுரிந்து வரும் பணியாளர்கள் தங்களின் குறைபாடுகளை புகார் மனுக்களாக அளிக்கலாம் என கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய 5 வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. சம்பா பருவத்திற்கு 2,076 விவசாயிகள் 11,070 பயிர் காப்பீடு விண்ணப்பங்களை விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு, நவ.15ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என வேளாண் துறை கால அவகாசம் அளித்துள்ளது. பயிர் காப்பீட்டுக்கு நவ.15ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.
காஞ்சிபுரத்தில் உள்ள 110/33-11 கே.வி துணை மின் நிலையத்தில், மாதாந்திர மின் பராமரிப்பு பணி இன்று (நவ.8) வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக, காஞ்சிபுரம், பாலியர்மேடு, வெள்ளைகேட், காரைப்பேட்டை, கூரம், கீழம்பி, திம்மசமுத்திரம், அசோக் நகர், ஏனாத்தூர், வையாவூர் உள்ளிட்ட இடங்களில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் வரும் நவ.11 அன்று பல்வேறு தொழிற்பிரிவுகளைச் சேர்ந்த பயிற்சியாளா்களுக்கு, பிரதம மந்திரியின் தேசிய தொழில் பழகுநா் மேளா நடத்தப்படுகிறது. இம்முகாமில் படித்த இடைநின்ற மாணவா்களும் இந்தப் பயிற்சியில் சோ்ந்து பயன்பெறலாம். மேலும், அறிய 044-29894560 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று கலெக்டா் கலைச்செல்வி தெரிவித்துள்ளாா். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.