India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோடை விடுமுறை முடிந்து இன்று(ஜூன் 10) அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. இதனால் நேற்று(ஜூன் 9) காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து புத்தகக் கடைகளிலும் நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் வாங்க பெற்றோருடன் மாணவர்கள் குவிந்து வருகின்றனர். மேலும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து புத்தக கடைகளும் ஞாயிறு விடுமுறையிலும் திறந்து வைத்து விற்பனை செய்தனர்.
தமிழக முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெறும் நிலையில் காஞ்சிபுரம் அடுத்த வெள்ளை கேட் பகுதியில் உள்ள பில்லா பாங் பள்ளியில் நடைபெற்ற தேர்வில் 9:00 மணிக்கு நுழைவாயில் மூடியதால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தேர்வாளர்கள் நுழைவாயில் முன்பு காத்திருந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் தேர்வாளர்களை கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது
காஞ்சிபுரம் மாவட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-ம் ஆண்டிற்கான மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கு 8 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் பெற கடைசி தேதி 07.06.2024 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 13.06.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் ஜவுளித்துறையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக தென்னிந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் (SITRA) மூலமாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஸ்பன்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேற்படி பயிற்சியினை பெற விரும்புபவர்கள் https://tntextiles.tn.gov.in/jobs/ என்ற இணையதள முகவரியில் பதிவுசெய்ய செய்யலாம்.
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்து சுங்குவார்சத்திரம் அருகே திருமங்கலம் பகுதியில் பணி செய்து வந்த மதுரமங்கலம் பகுதியை சேர்ந்த இளம் பெண் தேவி (32) மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு மழை நீர் கால்வாய் வீசப்பட்டுள்ளார் . தகவலறிந்து வந்த சுங்குவார்சத்திரம் போலீசார் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பெரிய காஞ்சிபுரம் தர்கா பகுதியில் கழிவுநீர் கால்வாய் நிரம்பி சாலைகளில் கழிவு நீர் வழிந்தோடி வருகிது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமின்றி தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் இருக்கும் நிலையில் பெரும்பான்மையான 35 கவுன்சிலர்கள் மேயர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்கள். அதில் மேயர் கணவர் யுவராஜ் வார்டில் அடிப்படை தேவைகளை செய்ய விடாமல் தடுப்பதாக மனுவில் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில், திருப்பெரும்புதூர் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் படப்பை மனோகரன் உள்ளிட்ட திமுக மாவட்ட ஒன்றிய பேரூராட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஜூன்.06) பெய்த மழையின் அளவு விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வாலாஜாபாத் பகுதியில் 9 செ.மீட்டரும், காஞ்சிபுரம், மீனம்பாக்கம் பகுதியில் 3 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் பரவலாக கனமழை பெய்தது. இந்நிலையில் மழையின் அளவு நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் – 33.4 மி.மீ,
உத்திரமேரூர் – 13.0 மி.மீ, வாலாஜாபாத் – 80.0 மி.மீ, ஶ்ரீபெரும்புதூர் – 29.0 மி.மீ, குன்றத்தூர் – 22.2 மி.மீ பதிவாகியுள்ளது. மொத்தமாக மாவட்டம் முழுவதும் 200.26 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.