India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ககாஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் சோழவரம் பகுதியை சேர்ந்தவர் முருகன்(40). இவர் மறைமலை நகரில் உள்ள தனியார் கம்பெனி பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். நேற்று(ஜூன் 10) இவர் ஓட்டி வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செல்வம் சுமார் 2.27 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் எம்.பி.செல்வம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேற்று(ஜூன் 10) சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இன்று (10.06.2024) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். மாற்றுத்திறனாளிகள் தங்களது மனுக்களை வாழ்வாதாரம் கேட்டு விண்ணப்பித்த மனுக்களை மாவட்ட ஆட்சியர் நேரில் பெற்று துறை சார்ந்த அலுவலர்களிடம் வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஜூன் 2024 மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் 21.06.2024 காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்ள இருப்பதால் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவித்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் இன்று (10.06.2024) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்கள். மேலும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி குறைதீர்க்கும் நாள் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது .
காஞ்சிபுரம் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் மேற்படி குறைந்தபட்ச ஊதிய அரசாணையின்படி மாநகராட்சி பணியாளருக்கான அடிப்படை ஊதியமான ரூ.14,000 ஆக உயர்த்தி நிர்ணயம் செய்யவும் அதற்கான நிலுவைத் தொகையினை வழங்குமாறு ஆட்சியர் கலைச்செல்வியிடம் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், பொதுமக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் மற்றும் துரை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று மக்கள் குறைதீர் நாளில் வழங்கப்பட்ட மனுக்களுக்கு விசாரணை மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இன்று(ஜூன் 10)காலை 11 மணியளவில் அனைவரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பாதுகாப்பு குறித்து உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றனர். மேலும், கல்வித்துறையை முதன்மை துறையாக மாற்றுவோம் எனவும் உறுதிமொழி ஏற்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் பிள்ளையார்பாளையம் பகுதியில் இயங்கி வரும் சாமிநாத மேல்நிலைப் பள்ளியில் இன்று(ஜூன் 10)காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மாணவர்களுக்கான ஆதார் மையத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்தாண்டு குரூப் 4 தேர்வுக்கு 40,721 பேர் விண்ணப்பித்திருந்தனர் . நேற்று (ஜூன் 9) நடைபெற்ற தேர்வுக்கு 32,571 பேர் வருகை புரிந்துள்ளனர். இதில் 8,150 தேர்வாளர்கள் தேர்வினை எழுதவில்லை என டி.என்.பி.சி தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் குரூப் 4 தேர்வானது 96 மையங்களில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.