India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கல்வராயன்மலை வட்டத்திற்குட்பட்ட மாவடிப்பட்டு கிராமத்தில் வன உரிமைச் சான்று கோரி பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுவினை நிறைவேற்றும் வகையில் இரண்டு கிலோ மீட்டர் தூரம் இரு சக்கர வாகனத்தில் சென்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், 24 மணி நேரமும் இயங்கும் அவசர கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருவதாகவும், மக்கள் 1077, 04151228801, 9787055764 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டில் சிறப்பு பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் மக்காச்சோளம், பருத்தி பயிர்களுக்கு அக்.31ஆம் தேதியும், சம்பா,நெல் மற்றும் உளுந்து பயிருக்கு நவம்பர்.15ஆம் தேதி வரையிலும் விவசாயிகள் தங்கள் பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அசோக் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியிலும் நேற்று இரவு முதல் பரவாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் இடையே கேள்வி எழுந்தது. தற்போது, கள்ளக்குறிச்சியில் உள்ள பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழை அளவு மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ஏதும் அறிவிக்கவில்லை. மேலும் மழைப் பொழிவை பொறுத்து ஏதேனும் விடுமுறை அறிவிப்பு இருந்தால் அது குறித்த தகவல் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தால் கொடுக்கப்படும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வரும் அக்டோபர் 25ஆம் தேதி முதல் விழாக்காலம் ஆரம்பிக்க உள்ளதால் கரும்பு ஏற்றி செல்லும் வாகனங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில் நகரப் பகுதிக்குள் வர அனுமதியில்லை. வாகனங்கள் விளாந்தாங்கல் ரோடு, கரியப்பா நகர் மற்றும் ஏமப்பேர் வழியாக செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களின் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படை சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் பேரிடர் தொடர்பான அவசர தேவைக்கு 101, 112, 7305096222, 04151-222101 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே பகிரவும்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் எம்எஸ் பிரசாந்த் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 303 மனுக்களும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 18 மனுக்களும் என மொத்தமாக 321 மனுக்கள் பெறப்பட்டதாக கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.