Kallakurichi

News October 8, 2024

கள்ளக்குறிச்சி அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம்

image

உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் காந்திநகர் என்ற இடத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற சங்கர் (விவசாயி). அந்த வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உயிரிழந்தார். விபத்தில் சிக்கி உயிரிழந்த சங்கரின் உடல் பிரேத பரிசோதனைக்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து இந்த விபத்து குறித்து விழுப்புரம் ரயில்வே காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

News October 7, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களின் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 7, 2024

நகராட்சி ஆணையராக சரவணன் பொறுப்பேற்பு

image

கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த மகேஸ்வரி பணியிடை மாற்றம் செய்யப்பட்ட நிலையில் கள்ளக்குறிச்சி நகராட்சியின் புதிய நகராட்சி ஆணையராக சரவணன் என்பவர் நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில், இன்று கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி நகராட்சியின் புதிய நகராட்சி ஆணையராக சரவணன் சற்றுமுன் பொறுப்பேற்று கொண்டார்.

News October 7, 2024

கள்ளக்குறிச்சி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், காட்டுநெமிலி கிராம ஊராட்சியை உளுந்தூர்பேட்டை நகராட்சியுடன் இணைக்கப்போவதாக அறிந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு எங்களை நகராட்சியுடன் இணைக்க கூடாது என முழக்கமிட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News October 7, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சிட்கோ தொழிற்பேட்டைகளில் காலி தொழில்மனைகள் விற்பனைக்கு தயாராக உள்ளது. இதற்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட காலி மனைகளை பார்வையிட கடலூர் செம்மண்டலம் சிட்கோ தொழிற்பேட்டை கிளை மேலாளரை நேரிலோ தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம் என இன்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News October 7, 2024

கள்ளக்குறிச்சி மக்களுக்கு சுகாதாரத்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவலை தடுக்கும் விதமாக மூன்று நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 9 ஒன்றியங்கள் டெங்கு ஒழிப்பு பணியில் சுமார் 300 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் பணியாளர்கள் வீடு வீடாக சென்று கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அழிக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதாரத்துறை துறையினர் அறிவிப்பு.

News October 7, 2024

போராட்டங்கள் நடத்துவது தவிர்க்க வேண்டும் – கலெக்டர்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நகராட்சிகளுடன் சில ஊராட்சிகள் இணைப்பது தொடர்பாக தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதில் பொதுமக்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அவர்கள் சாலை மறியல் போராட்டம் என நடத்தி வருவது தெரிகிறது. எதுவாக இருந்தாலும் பொதுமக்களின் கருத்து கேட்ட பிறகுதான் ஊராட்சிகள் நகராட்சிகளுடன் இணைக்கப்படும் என தெரிவித்தார்.

News October 6, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (06.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் பொதுமக்களின் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 6, 2024

உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

image

உளுந்தூர்பேட்டை அருகே மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மனைவி ராஜகுமாரி. இவர் நேற்று புதிதாக கட்டி வரும் வீட்டின் பகுதியில் மின் வயரில் தெரியாமல் கை வைத்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 6, 2024

கள்ளக்குறிச்சியில் 48 வாகனங்கள் பறிமுதல்

image

கள்ளக்குறிச்சி பகுதிகளில் இரவு நேரங்களில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் நேற்று இரவு நேரங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஓட்டுனர் உரிமம், ஆர்சி புத்தகம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் என போக்குவரத்து விதிகளை மீறியதாக 48 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!