Kallakurichi

News May 9, 2024

கள்ளக்குறிச்சி: குடிநீர் குறைதீர் கட்டுப்பாட்டு மையம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடுக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் குடிநீர் குறைதீர் கட்டுப்பாடு மையம் தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் குறைகளை 04151- 222001, 04151-222002 என்ற தொலைபேசி எண்கள் மூலம் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அறிவித்துள்ளார்.

News May 9, 2024

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (மே.09) 4 மணி வரை லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையின் வெப்பம் அதிகமான நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பொழிவு ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது

News May 9, 2024

டிராக்டர் வழங்க கள்ளக்குறிச்சிக்கு நடிகர் லாரன்ஸ் வருகை

image

கள்ளக்குறிச்சி நல்லாத்தூர் கிராமத்தில் சேவையை கடவுள் மாற்றம் என்ற அறக்கட்டளை சார்பில் டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.இதில் நடிகர் லாரன்ஸ் கலந்துகொண்டு டிராக்டரை வழங்க வருகை தந்துள்ளார். அப்பொழுது லாரன்ஸ் பார்க்க இளைஞர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் என அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்

News May 9, 2024

கள்ளக்குறிச்சி அருகே இருவர் கைது 

image

தென்கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த சரண்யா.இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.இந்நிலையில் சரண்யாவிற்கு சொந்தமான காட்டுகொட்டகையை சேர்ந்த இளையராஜா மற்றும் அவரது ஆதரவாளர்கள் நான்கு பேர் சேதப்படுத்தி சரண்யா மற்றும் அவரது தாயை தாக்கியதாக கூறப்படுகிறது.புகாரின் பேரில் 4 பேர் மீது வழக்குபதிவு செய்து அதில் இளையராஜா, கண்ணன் ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர்.

News May 8, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

image

ஜூன் 4 ஆம் தேதி கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், அனைத்து வேட்பாளர்கள், முகவர்கள் கூட்டம் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான ஷ்ரவன்குமார், வாக்கு எண்ணிக்கை அமைதியாகநடைபெற வேட்பாளர்கள், வேட்பாளரின் முகவர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

News May 8, 2024

தீ விபத்தில் கருவேல மரங்கள் எரிந்து சேதம்

image

உளுந்தூர்பேட்டை அருகே உளுந்தாண்டார் கோவில் பகுதியில் வசித்து வருபவர் குணசேகரன் 40. விவசாயி இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் கருவேலமுள் மரங்கள் நேற்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் மளமளவென எறிய தொடங்கியது. இதுகுறித்து அங்கு தகவல் அறிந்து வந்த மங்கலம் பேட்டை தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீனை கட்டுக்குள் கொண்டு வந்து அனைத்தனர்.

News May 8, 2024

கள்ளக்குறிச்சி: 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 முதல் 40 கிமீ வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதன்படி கள்ளக்குறிச்சி உட்பட 12 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 8, 2024

அரசு பேருந்து மோதி தொழிலாளி இறப்பு

image

சங்கராபுரம் அடுத்த மஞ்சபுத்துார் கிராமத்தைச் சேர்ந்த சேவி(50) சங்கராபுரம் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று (மே 7) டி.வி.எஸ்., மொபட்டில் சென்றார். பூட்டை அருகே சென்றபோது எதிரே வந்த அரசு டவுன் பஸ் மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சேவி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News May 7, 2024

கள்ளக்குறிச்சி கோமுகி அணை சிறப்புகள்!

image

1963இல் அன்றைய முதல்வர் காமராஜர் காலத்தில் கட்டும் பணி துவங்கப்பட்ட கோமுகி அணை, 1965 ஆம் ஆண்டு பக்தவத்சலம் காலத்தில் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வந்தது. கல்வராயன் மலைப் பகுதியில் பெய்யும் மழைநீர் முழுவதும் கல்படை, பொட்டியம், மல்லிகைப்பாடி, பரங்கிநத்தம் ஆகிய ஆறுகளின் வழியாக இந்த அணைக்கு வருகிறது. 60 ஹெக்டர் நீர்ப்பரப்பு கொண்ட இந்த அணை மூலம் 50-க்கும் மேற்பட்ட கிராம விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

News May 7, 2024

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தவர் கைது

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் மலையம்மன் கோயில் பின்புறம் இன்று இரு சக்கர வாகனத்தில் கஞ்சா வைத்துக் கொண்டு விற்பனையில் ஈடுபட்டு வந்த வி.புதூர் கிராமத்தைச் சேர்ந்த மூவேந்திரன் என்பவரை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய சித்தலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆதி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மூவேந்திரன் இடமிருந்து 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.