Kallakurichi

News October 24, 2024

குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவு 

image

ஒலையனூர் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளியில் பள்ளிக் குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட R.R. குப்பம் கிராமத்தைச் சேர்ந்த துரை அரசன் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) என்பவர் மீது கடந்த 24-09-2024 அன்று உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News October 24, 2024

கள்ளக்குறிச்சியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் நாளை (24-10-2024) 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யுக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.

News October 23, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (23.10.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 23, 2024

மரவள்ளிக்கிழங்கு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

image

கச்சிராயப்பாளையம் அருகே தெங்கியாநத்தம் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் விவசாய நிலத்தில் இன்று காலை மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்து அதை லாரியில் ஏற்றிக்கொண்டு காட்டுப் பகுதியில் இருந்து மெயின் ரோட்டுக்கு வந்து கொண்டிருந்தது. அப்பொழுது துரை என்பவரின் காட்டின் அருகே வந்த பொழுது லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கிழங்குகள் கீழே கொட்டி சேதமானது. ஜேசிபி இயந்திரம் மூலம் லாரி மீட்கப்பட்டது.

News October 23, 2024

புகார் அளிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

image

தமிழகத்தில் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தை சேர்ந்த நபர்கள் மற்றும் தீருதவி தொடர்பான முறையீடுகள் செய்ய18002021989 அல்லது 14566 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி புகார்கள் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று அறிவித்துள்ளார்.

News October 23, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசின் சார்பில் வரும் டிசம்பர் மூன்றாம் தேதி நடைபெறும் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சேவை புரிபவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சேவை புரிபவர்கள் மற்றும் நிறுவனங்கள் விருதுகளைப் பெற விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று அறிவித்துள்ளார்.

News October 23, 2024

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் 

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற அக்.25ஆம் தேதி   காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு, தங்களின் கோரிக்களை மனுக்களை வழங்கிட மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் தகவல் தெரிவித்து உள்ளார்.

News October 23, 2024

உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

image

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் என்று அக்டோபர் 23ஆம் தேதி தக்காளி கிலோ ஐம்பது ரூபாய்க்கும், உருளை கிலோ 55 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் கிலோ 60 ரூபாய்க்கும், கத்திரிக்காய் கிலோ 50 ரூபாய்க்கும், முருங்கைக்காய் கிலோ 90 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

News October 23, 2024

கள்ளக்குறிச்சி அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி

image

கள்ளக்குறிச்சி அருகே வரஞ்சரம் அடுத்த எஸ்.ஒகையூரை சேர்ந்தவர் பிச்சப்பிள்ளை,36; விவசாயி. பிச்சப்பிள்ளையும், அவரது மனைவி தையல்நாயகியும் நேற்று மாலை நிலத்திற்கு சென்றனர். ஈயனுார் பகுதியில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. அதில், வரப்பில் நடந்து சென்ற பிச்சப்பிள்ளை மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 23, 2024

கலெக்டருக்கு நீதிமன்றம் உத்தரவு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை செய்து வரும் நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் மாவட்ட ஆட்சியருக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் வெள்ளிமலை முதல் சின்னத்திருப்பதி வரை பேருந்து வசதி தொடங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.

error: Content is protected !!