India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி காந்தி சாலையில் பாசன வாய்க்கால்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை வரும் மே 28ம் தேதி இடிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே நோட்டீஸ் ஓட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் பாசன வாய்க்கால்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் நகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்புகள் வரும் 24ம் தேதி முதல் துண்டிக்கப்படும் என நகராட்சி ஆணையர் மகேஸ்வரி அறிவித்துள்ளார்
சின்ன சேலம் அம்சா குளம் பகுதியில் நகரப் பகுதியில் உள்ள கோமதி மளிகை கடை மார்ச் மாதத்தில் ஹான்ஸ் குட்கா போன்ற பொருட்கள் விற்றதற்காக காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது .இந்த வழக்கின் காரணமாக நேற்று மாவட்ட ஆட்சியர் ஒப்புதலின் வழக்கு பதிவு செய்யப்பட்ட தடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சண்முகம் சின்னசேலம் காவல்துறை பாதுகாப்புடன் சீல் வைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணவரெட்டி கிராமத்தில் நேற்று மாலை பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் தனது வீட்டின் அருகே உள்ள தென்னை மரத்தின் கீழே தனது இரண்டு மாத கன்று குட்டியை கட்டி வைத்துள்ளார். இந்நிலையில் திடீரென தென்னை மரத்தில் இடி தாக்கியதில் தென்னை மரத்தின் கீழே கட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு மாத கன்று குட்டி பரிதாபமாக உயிரிழந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்ட மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பிக்க இறுதி நாள் மே.20ஆம் ஆக இருந்தது. இந்த நிலையில், 24ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு உதவி தேவைப்படின் அழகர் தமிழர் நலத்துறையின் கட்டணமில்லா 24 மணி நேர அழைப்புதவி மையத்தின் 18003093793, 8069009901, 8069009900 ஆகிய எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் பகுதியில் முன்னாள் சென்ற லாரி மீது இன்று (மே 20)அதிகாலை அரசு சொகுசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் 14 பேர் படுகாயம் அடைந்த நிலையில் விபத்தில் சிக்கிய வாகனங்களை போக்குவரத்து போலீசார் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அச்சமயத்தில் அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
சின்னசேலம் நகர பகுதியில் இன்று காலை 11: 30க்கு மின்தடை ஏற்பட்டது. 2 மணி நேரம் ஆகியும் மின்சாரம் வரவில்லை. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். சின்னசேலம் பகுதியில் குடியிருக்கும் மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீட்டில் குழந்தைகளுடன் இருப்பவர்கள் மின்சாரம் இல்லாததால் குழந்தைகளும், பெரியவர்களும் அவதி அடைந்துள்ளனர். உடனடியாக மின்சாரம் சரி செய்ய மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் மே 20-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக கல்லூரியில் உள்ள ஐந்து பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பொறுப்பு மணிகண்டன் அறிவித்துள்ளார். விருப்பமுள்ள மாணவ மாணவிகள் உரிய ஆவணங்களுடன் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா இன்று (மே.17) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் கள்ளக்குறிச்சியில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.