Kallakurichi

News May 25, 2024

புகையிலை விற்ற கடைக்கு சீல்

image

சின்னசேலம் பகுதியில் தொடர்ந்து ஹான்ஸ் விற்பனை செய்யும் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். பெட்டிக்கடைகளில் ஹான்ஸ் மற்றும் புகையிலை விற்றதாக கடந்த மாதத்தில் காவல்துறையால் போடப்பட்ட வழக்குகளில் இன்று விழுப்புரம் உணவு பாதுகாப்பு துறை சேர்ந்த சண்முகம் அவர்கள் சின்னசேலம் காவல்துறை உதவியுடன் கூகையூர் ரோடு, அண்ணாநகர் ரோடு ஆகிய 3 கடைகளுக்கு சீல் வைத்தனர்.

News May 25, 2024

ரயிலில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள சு.ஒகையூர் கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் திருக்கோயில் அருகே இன்று சென்றுகொண்டிருந்த ரயிலில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து உயிரிழந்தவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 24, 2024

கள்ளக்குறிச்சி: 4 ஆண்டுகள் ஆகியும் அலட்சியம்!

image

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிந்து 4 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அத்தனை அரசு அலுவலக பெயர் பலகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் என பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இந்நிலையில் சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள சார்நிலை கருவூலத்தில் விழுப்புரம் மாவட்டம் என பெயர் உள்ளதால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

News May 23, 2024

கள்ளக்குறிச்சி: வாக்கு எண்ணிக்கை குறித்து ஆலோசனை

image

நாடாளுமன்ற தேர்தல் ஏப்.19ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன்.4ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதசாகு தலைமையில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் கலந்து கொண்டார்.

News May 23, 2024

கள்ளக்குறிச்சி: 7 மணிவரை மிதமான மழை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணிவரை மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 23, 2024

குடிநீர் பிரச்சினை தொடர்பாக அளிக்கப்பட்ட 77 மனுக்கள் மீது தீர்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிலவிவரும் குடிநீர் தட்டுப்பாடு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை 100 புகார் மனுக்கள் பெறப்பட்டது. அதில், 77 புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News May 23, 2024

கள்ளக்குறிச்சியில் போலீசார் வாகன சோதனை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு நேரங்களில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறியும் வகையில் இரவு நேரங்களில் கள்ளக்குறிச்சி காவல் நிலைய போலீசார் கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

News May 22, 2024

கள்ளக்குறிச்சி: சவுக்கு சங்கர் மீது பள்ளி மாணவி ஸ்ரீமதி தாய் புகார்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி இன்று நேரில் சென்று புகார் அளித்துள்ளார்.

News May 22, 2024

சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் அறிவுறுத்தலின்படி கள்ளக்குறிச்சியில் வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை வாங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் படி வியாபாரிகள் மற்றும் வணிகர்கள், பொதுமக்கள் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்கும் வகையில் பத்து ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்களை வாங்க வேண்டும் என அறிவித்துள்ளனர்.

News May 22, 2024

கள்ளக்குறிச்சி: இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இன்று (மே.22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.