Kallakurichi

News November 10, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 18 வயதிற்குட்பட்ட 300 அரசு பள்ளி மாணவிகளுக்கு கணினி பயிற்றுநர்களைக் கொண்டு குறுகிய கால கணினி பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் இன்று அறிவித்துள்ளார்.

News November 10, 2024

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்றைய விலை

image

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்றைய விலை தக்காளி ரூ.30 உருளைக்கிழங்குரூ. 55, சின்ன வெங்காயம் 50, பெல்லாரி ரூ.50, பச்சை மிளகாய் ரூ.50, கத்தரிக்காய் ரூ.40 முருங்கைக்காய் ரூ.70 பீர்க்கங்காய் ரூ.70, சுரைக்காய் ரூ.20, புடலங்காய் ரூ.36, பாகற்காய் ரூ.50, முள்ளங்கி ரூ.48, பீன்ஸ் ரூ.80, அவரை ரூ.70, கேரட் ரூ.80, கொத்தவரை 40, பூசணிக்காய் ரூ.30, பரங்கிக்காய் ரூ.30, இஞ்சி ரூ.90 விற்பனை ஆகிறது.

News November 10, 2024

கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு பணியாளர்கள் குறைதீர்வு முகாம்

image

கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க அலுவலகத்தில் அனைத்து வகை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான குறைதீர்வு முகாம் இதற்கு கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை நடைபெற்றது. இந்த முகாமில் பணி மாறுதல் மற்றம் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர்.

News November 9, 2024

மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய எம்எல்ஏ

image

சின்னசேலம் அருகே உள்ள மேலூர் கிராமத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்பட்டோர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களை எம்எல்ஏ நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

News November 9, 2024

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (9.11.2024) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆகவே அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100 என்ற எண்ணை டயல் செய்யலாம் என மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

News November 9, 2024

இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் பகுதியில் காமராஜ் என்ற இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொடர்ந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் காமராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 9, 2024

64 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்

image

சங்கராபுரம் வட்டார பகுதியைச் சேர்ந்தவர்களுக்காக, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்ரமணி தலைமை தாங்கினார். இதில் பங்கேற்ற 133 பேரில் 64 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் யு.டி.ஐ.டி., பதிவெண்ணுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.

News November 8, 2024

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சியில் வரும் 15ஆம் தேதி வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை துருகம் சாலையில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறலாம். 25 தனியார் நிறுவனங்கள் ஆட்களை தேர்வு செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 8, 2024

கள்ளக்குறிச்சியில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேர்ந்த தொழில் முனைவோர் வருகிற நவ.20 ஆம் தேதி வரை முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் 10 சதுர அடிக்கு குறையாமல் சொந்த இடம் அல்லது வாடகை இடம் இருக்கும் நபர்கள் mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்காக ரூ.3 லட்சம் இரண்டு தவணைகளாக அரசு மானியம் கடன் வழங்குகிறது. என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 8, 2024

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் அந்த நபரை குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி நேற்று  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!