Kallakurichi

News January 21, 2025

ஆட்சியரிடம் விசிக மாவட்ட செயலாளர் மனு

image

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மாநில கட்சி அந்தஸ்து தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு விசிக நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் வேல் பழனியம்மாள் இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தார். உடன் பெரியார் சசி இருந்தார்.

News January 21, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (21.1.2025) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள்குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம்.

News January 21, 2025

திருக்கோவிலூர் மருத்துவமனைக்கு விருது

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு சிறந்த சேவைக்காக சிறப்பு விருதினை திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர் (பொ) டாக்டர் ராஜவிநாயகத்திடம் இன்று சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். அப்போது கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியாசாகு, தேசிய சுகாதார இயக்கக இயக்குனர் அருண்தம்புராஜ் உடனிருந்தார்.

News January 21, 2025

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவுறுத்தல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசு திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் எம்எஸ். பிரசாந்த் அவர்கள் இன்று (21.1.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது அரசு திட்டப்பணிகளின் பதிவேடுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

News January 21, 2025

திருநாவலூர் பகுதிகளில் நாளை மின்தடை

image

திருநாவலூர் துணை மின் நிலையத்–தில் நாளை (ஜன.22) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால, அதன் சுற்றுவட்டார பகுதிகளான கெடிலம், திருநாவலூர், செம்மணந்தல், ஆவலம், குச்சிப்பாளையம், சமத்துவபுரம், தேவியானந்தல், பெரியப்பட்டு, கிழக்கு மருதூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது. என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..

News January 21, 2025

திருப்பாச்சனுர், எறையூர் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்

image

திருப்பாச்சனுார் மற்றும் எறையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக காவணிப்பாக்கம், சித்தாத்துார், கொளத்துார், வி.அரியலுார், கண்டமானடி, அத்தியூர் திருவாதி, பிள்ளையார்குப்பம், புருஷானூர், ராவணஅகரம், திருப்பாச்சனுார், புகைப்பட்டி, கூத்தனூர், நரிப்பாளையம், கூவாடு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 20, 2025

இரவு நேர ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 20, 2025

318 மனுக்கள் பெற்று கொள்ளப்பட்டதாக அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 305 மணுக்களும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 13 மணிக்குள்ளும் என மொத்தமாக 318 மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டதாக கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 20, 2025

விஷம் குடித்து விவசாயி உயிரிழப்பு

image

சின்னசேலம் அடுத்த செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (75), விவசாயியான இவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைப்பார்த்த குடும்பத்தினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 20, 2025

ஈருடையாம்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை

image

ஈருடையாம்பட்டு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜன.21) நடைபெற இருப்பதால் ஈருடையாம்பட்டு, மூங்கில்துறைப் பட்டு, அரும்பரம்பட்டு, ஆற்கவாடி, சுத்தமலை, ஆதனூர், மங்கலம், வடமாமந்தூர், தர்கா, மைக்கேல்புரம், சவேரியார்பாளையம், பொரசப்பட்டு, மேல்சிறுவள்ளூர், வடபொன்பரப்பி, வடக்கீரனூர், சீர்பாதநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 – 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. ஷேர் செய்யவும்..

error: Content is protected !!