India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் அனைத்து விதமான திருத்தங்கள் செய்ய அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இச்சிறப்பு முகாம்கள் நாளை (நவ.16), நாளை மறுநாள் (நவ.17) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது. மக்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (நவ.16.) கள்ளக்குறிச்சி துணை மின் நிலையம், மூங்கில்பாடி துணை மின் நிலையம், எடுத்தவாய்நத்தம் துணை மின் நிலையம் ஆகிய பகுதிகள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளன. கச்சிராயபாளையம், அக்கராயபாளையம், மூங்கில்பாடி, திம்மாபுரம், மட்டப்பாறை, வெள்ளிமலை, மண்மலை, அரசம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பிஇ, பி.டெக் பொறியியல் படிப்பு படித்த மாணவர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம் என ஆட்சியர் கூறியுள்ளார். இன்று (நவ.15) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை துருகம் சாலையில் உள்ள அரிசி ஆலை உரிமையாளர் சங்க மண்டபத்தில் இந்த வேலை வாய்ப்பு முகாம் நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்று வரும் பவித்திர உற்சவம் நிகழ்வில் இன்று தமிழ் திரை உலகின் முக்கிய இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் உரிய மரியாதை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தீனதயாள் உபாத்யாய திருவிழா கிராமின் கௌசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர் திறன் 17.11.2024 அன்று கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 09.00 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது. இந்த இளைஞர் திறன் திருவிழாவில் இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் சென்னையில் இன்று நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள சித்தலூர் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருதினை தமிழ்நாடு பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். அதனை பள்ளியின் தலைமை ஆசிரியர் ரமேஷ் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினருமான த.உதயசூரியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வரும் 16 17ஆம் தேதிகளில், மேலும் 23 24 தேதிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் மாவட்டம் தோறும் நடைபெறுகிறது. இதில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது. இதில் அதிக அளவில் இளைஞர்களை சேர்க்க திமுகவினர் உதவி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
மணலூர்பேட்டை அடுத்துள்ள, தேவரடியார்குப்பம்,அரியலூரில் இயங்கி வரும் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், மணலூர்பேட்டை, சித்த பட்டினம், செல்லங்குப்பம்,சாங்கியம், தேவடியார்குப்பம், காங்கேயனூர்,எடுத்தனூர்,ஜம்படை,ஓடியந்தல்வாணாபுரம்,பகண்டை கூட்ரோடு,தொழு வந்தாங்கள், சின்னகொள்ளியூர்,கடுவனூர் புஷ்பகிரி,ஏந்தல் எகால் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி கிராமங்களில், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விடிய விடிய மழை பெய்ததால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கின்றன.
ஆண்டுதோறும் பழங்குடியினர் நல தினம் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் வரும் 15ஆம் தேதி கரியலூர் கோடை விழா அரங்கில் பழங்குடியினர் நல தினம் கொண்டாடப்படுகிறது. இதில் பழங்குடியினர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவாணன் கலந்து கொண்டு 2000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
Sorry, no posts matched your criteria.