Kallakurichi

News March 5, 2025

திருமண நிதி உதவி திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக நல அலுவலகம் மூலம் ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் முத்துலட்சுமிரெட்டி அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பத்தாம் வகுப்பு முடித்த தகுதியான பயனாளிகள் வரும் 15ஆம் தேதிக்குள் இ-சேவை மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 5, 2025

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை

image

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தியா முழுவதும் 750 பணியிடங்கள், தமிழகத்தில் 175 பணியிடங்கள் உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 9ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலை.,த்தில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 20 – 28 வயது வரை இருக்க வேண்டும். மாதம் ரூ.15,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க

News March 5, 2025

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

image

சின்னசேலம் அனுமனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் அங்கமுத்து, 50; விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் உள்ள மின்மோட்டார் பழுதாகியது. அதனை சரி செய்ய நேற்று மதியம் 1:00 மணியளவில் கிணற்றில் இறங்கினார். அப்போது, தவறி விழுந்து, தலையில் பலத்த காயமடைந்து நீரில் மூழ்கினார். தகவல் அறிந்து சென்ற சின்னசேலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கமுத்துவின் உடலை மீட்டனர். சின்னசேலம் போலீசார் விசாரணை

News March 5, 2025

விஷம் குடித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலி

image

சின்னசேலம் அடுத்த பெத்தானுாரை சேர்ந்தவர் அங்கமுத்து மனைவி சடையம்மாள் (55).மனநலம் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.கடந்த 2ம் தேதி காலை வயலுக்கு பயன்படுத்த வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்,நேற்று பிற்பகல் 2:00 மணியளவில் இறந்தார்.சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News March 4, 2025

பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

image

ரிஷிவந்தியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 14 வயதுடைய பள்ளி மாணவன், பள்ளியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த வேலுமணி(53) என்ற நபர் சிறுவனுக்கு லிப்ட் தருவதாக அழைத்துச் சென்று காப்பு காட்டுக்குள் கத்தியை காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து போலீசார் வேலுமணியை போக்சோவில் கைது செய்தனர்.

News March 4, 2025

74 வயது முதியவர் 13 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல்

image

கள்ளக்குறிச்சிமாவட்டம் தியாகதுருகம் அடுத்த கூத்தக்குடி பகுதியைச் சேர்ந்தவர் முனியன். 13 வயது சிறுமியிடம் நேற்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் முனியன் மீது போக்சோ சட்டத்தில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.

News March 4, 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள வீரசோழபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணியினை இன்று மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தின் திட்ட வரைபடத்தினையும் பார்த்து கட்டிட பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு செய்தார்.

News March 4, 2025

சித்தா, ஆயுர்வேதா படித்தவர்களுக்கு அரசு வேலை

image

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ஆயுர்வேதா, சித்தா, யுனானி ஆகிய இந்திய மருத்துவ துறைகளில் காலியாக உதவி மருத்துவ அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதிகபடியாக 59 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு பின்னர் அறிவிக்கப்படும்.

News March 4, 2025

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 524 பேர் ‘ஆப்சென்ட்’

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று காலை தொடங்கிய நிலையில், 8,910 மாணவர்கள், 9,318 மாணவியர் என மொத்தம் 18,228 பேர் தேர்வெழுதினர். 273 மாணவர்கள், 251 மாணவிகள் என 524 பேர் தேர்வுக்கு வரவில்லை. அதேபோல் தனித்தேர்வர்களில் 90 ஆண்கள், 94 பெண்கள் என 184 பேர் நேற்று தேர்வெழுதினர். 30 பேர் தேர்வுக்கு வரவில்லை.

News March 4, 2025

மார்ச் முழுவதும் மின்தடை இல்லை

image

துணை மின் நிலையங்களில் மாதம் ஒரு நாள் மட்டும் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில், மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் குறித்த விவரங்களை வெளியிட்டு மக்களை எச்சரித்து வருகிறது. தற்போது, 10 மற்றும் 12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் நடைபெறுவதால் மாணவர்களின் நலன் கருதி மின்வாரியம் மார்ச் மாதம் முழுவதும் மின்தடை எதுவும் நிகழாது என்று தெரிவித்துள்ளது.

error: Content is protected !!