India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இவர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.இதற்கான உத்தரவை டிஜிபி சங்கர் ஜிவால் இன்று வெளியிட்டுள்ளார்.
இந்திய ஒன்றியத்தின் பிரதமராக பத்தாண்டு காலம் மிகச் சிறப்பாக பணியாற்றிய பொருளாதார அறிஞர் மன்மோகன்சிங் மறைந்தார் என்ற செய்தியை அறிந்து வருத்தம் அடைகின்றேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் பேரியக்கத்தின் தொண்டர்களுக்கும் திமுக தொண்டர்களில் ஒருவராக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன் என கள்ளக்குறிச்சி எம்.பி மலையரசன் வெளியிட்டுள்ள இரங்கலில் குறிப்பிட்டுள்ளார்
கள்ளக்குறிச்சி மாவட்டம் எறையூர் கிராமத்தில் உள்ள பூண்டி மெயின் ரோடு அருகே இன்று அதிகாலை ஆனந்த் அமல்ராஜ் என்பவர் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (26.12.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் எதிரே அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை எதிர்த்தும், திமுக அரசை கண்டித்தும் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட கழகம் சார்பில் கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை சங்கராபுரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் பொது சுகாதார துறையின் கீழ் 7 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 19 கட்டிடங்களை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஜி.அரியூர் வட்டார அரசு சுகாதார நிலையத்தில் இருந்தவாறு இன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் இயங்கி வரும் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு வட பொன்பரப்பியில் இருந்து டிராக்டர் ஒன்று சென்றுள்ளது. அப்போது டிராக்டர், வட கீரனூர் அருகே உள்ள ஏரி உபரி நீர் செல்லும் வாய்க்காலை கடந்து செல்லும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு மனுக்களை அளித்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சாலைகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்க பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்டில் சொல்லுங்க
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வேளாண் சந்தை நுண்ணறிவு மற்றும் உழவர் ஆலோசனை மையக் கட்டிடத்தினை நாளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் திறந்து வைக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.