India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இன்று ( ஜன 2) மருத்துவ முகாம் நடைபெற்றது. அடையாள அட்டை இல்லாத மாற்றுத்திறனாளிகள் 80 நபர்கள் அழைக்கப்பட்டதில், 75 நபர்கள் வந்தனர். அவர்களுக்கு மருத்துவ சான்று மற்றும் யுடிஐடி பதிவு எண்ணுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சின்னசேலம் அருகே உள்ள திம்மாபுரம் கிராமத்தில் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சம்பவம் நடைபெற்று ஏழு நாட்கள் ஆகியும் கொலை குற்றவாளிகளை கைது செய்ய தமிழ்நாடு அரசும், காவல்துறையும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இணையதளத்தில் தற்போது செயல்பட்டு வரும் புத்தாண்டு வாழ்த்து ஆப் (apk file) மோசடி அனைத்து இடங்களிலும் நடைபெற்று வருகிறது. எனவே வாட்ஸ் அப்பில் அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து வரும் புத்தாண்டு வாழ்த்துக்களை தவிர்க்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற இணையதள மோசடிகளில் மக்கள் சிக்க வேண்டாம் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பொதுமக்களிடமிருந்து பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பொதுமக்களிடமிருந்து 387 மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 30) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.30) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு, நல வாரியம் மூலம் மூன்று சக்கர சைக்கிள் மற்றும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலரும் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நேற்று இரவு சாலை பாதுகாப்பு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ஆட்சியர் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் சாலை பாதுகாப்பு விதிகளை வாகன ஓட்டிகள் முறையாக கடைப்பிடிப்பதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் சாலை விதிகளை மீறுபவர்கள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் பெஞ்சல் புயல் மழையால் பாதிப்புக்குள்ளான 98 ஆயிரத்து 115 ஏக்கர் பரப்பளவிலான பயிர் சாகுபடி நிலங்களுக்கு 43 ஆயிரத்து 476 விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் மொத்தம் ரூ.49 கோடி ரூபாய் மதிப்பீடு செய்து தமிழக அரசிடம் கோரப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.