Kallakurichi

News January 5, 2025

நாளை தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

image

பெண்களுக்கும் மாணவிகளுக்கும் எதிராக தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்தும் தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்திட வலியுறுத்தியும் கள்ளக்குறிச்சி மாவட்ட தேமுதிக சார்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் ஜனவரி 6 ஆம் தேதி அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கருணாகரன் அறிவித்துள்ளார்.

News January 5, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ( 5.1.2025 ) இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள்குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது100-ஐ டயல் செய்யலாம்.

News January 5, 2025

பேரறிஞர் அண்ணா தொடர் ஓட்ட போட்டி

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பேரறிஞர் அண்ணா ஓட்ட போட்டியினை இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில், ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

News January 5, 2025

வெறிநாய் கடித்து 27 பேர் காயம்

image

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் தெரு நாய் ஒன்று மக்கள் சிலரை விரட்டி கடித்துள்ளது. இதனையடுத்து, மக்கள் ஒன்று கூடி தெரு நாயை விரட்டியடித்தனர். அதனையொட்டி, கோட்டைமேடு, மோரைபாதை, செக்குமேட்டு தெரு பகுதிக்கு சென்ற வெறிநாய் அவ்வழியாக சென்றவர்களை விரட்டி கடித்துள்ளது. இதில் கருணாபுரம், கோட்டைமேடு, மோரைபாதை சேர்ந்த 27 பேர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

News January 4, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 4, 2025

கள்ளக்குறிச்சி அருகே மூதாட்டி உடல் நசுங்கி பலி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் நான்கு முனை சந்திப்பில் சேலம் சென்ற அரசு பேருந்து சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டியின் மீது முன் சக்கரம் ஏறி இறங்கியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இதையடுத்து,  கள்ளக்குறிச்சி போலீசார் உயிரிழந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 4, 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள வீரசோழபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பெருந்திட்ட வளாக கட்டிட கட்டுமான பணிகளை இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். தற்போதைய கட்டுமான பணிகளின் நிலை குறித்தும், பணிகள் எப்போது நிறைவடையும் என்பது குறித்தும் அதிகாரியிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

News January 3, 2025

சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12 மற்றும் பட்டப்படிப்பு படித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்களுக்கு சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரியும் வகையில் 2 முன்னணி நிறுவனங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதனை பயன்படுத்திக்கொளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

News January 3, 2025

சோளக்காட்டு பெண் பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சோளக்காட்டில் கணவனை இழந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த விவகாரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டான். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் மது போதையில் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் நடந்து 6 நாட்களுக்கு பின் குமரேசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.பஎ

News January 2, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (3.1.2025 ) இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. 

error: Content is protected !!