India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டம் நான்கு முனை சந்திப்பில் சேலம் சென்ற அரசு பேருந்து சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டியின் மீது முன் சக்கரம் ஏறி இறங்கியதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இதையடுத்து, கள்ளக்குறிச்சி போலீசார் உயிரிழந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள வீரசோழபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பெருந்திட்ட வளாக கட்டிட கட்டுமான பணிகளை இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். தற்போதைய கட்டுமான பணிகளின் நிலை குறித்தும், பணிகள் எப்போது நிறைவடையும் என்பது குறித்தும் அதிகாரியிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12 மற்றும் பட்டப்படிப்பு படித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர்களுக்கு சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரியும் வகையில் 2 முன்னணி நிறுவனங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதனை பயன்படுத்திக்கொளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சோளக்காட்டில் கணவனை இழந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த விவகாரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டான். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் மது போதையில் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் நடந்து 6 நாட்களுக்கு பின் குமரேசன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.பஎ
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (3.1.2025 ) இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இன்று ( ஜன 2) மருத்துவ முகாம் நடைபெற்றது. அடையாள அட்டை இல்லாத மாற்றுத்திறனாளிகள் 80 நபர்கள் அழைக்கப்பட்டதில், 75 நபர்கள் வந்தனர். அவர்களுக்கு மருத்துவ சான்று மற்றும் யுடிஐடி பதிவு எண்ணுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சின்னசேலம் அருகே உள்ள திம்மாபுரம் கிராமத்தில் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சம்பவம் நடைபெற்று ஏழு நாட்கள் ஆகியும் கொலை குற்றவாளிகளை கைது செய்ய தமிழ்நாடு அரசும், காவல்துறையும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இணையதளத்தில் தற்போது செயல்பட்டு வரும் புத்தாண்டு வாழ்த்து ஆப் (apk file) மோசடி அனைத்து இடங்களிலும் நடைபெற்று வருகிறது. எனவே வாட்ஸ் அப்பில் அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து வரும் புத்தாண்டு வாழ்த்துக்களை தவிர்க்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற இணையதள மோசடிகளில் மக்கள் சிக்க வேண்டாம் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.