Kallakurichi

News January 23, 2025

காவல்துறையை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தமிழக அரசே !!! மாவட்ட காவல் துறையே !!! சட்டவிரோத கும்பல் மீது நடவடிக்கை எடு !!! என்ற தலைப்பு வாசகங்களுடன் காவல்துறையினரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News January 23, 2025

கள்ளக்குறிச்சியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நாளை 24 ஆம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் உள்ள அரிசி ஆலை உரிமையாளர் சங்க மண்டபத்தில் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும் முகாமில் வங்கி,நிதி, வாகன உற்பத்தி,காப்பீடு, சில்லரை விற்பனை சார்ந்த முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 22, 2025

இரவு நேர ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 22, 2025

கள்ளக்குறிச்சியில் கிராம சபை கூட்டம் அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் ஜனவரி 26ஆம் தேதி அன்று குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கிராம சபை கூட்டத்தில் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளின் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News January 22, 2025

பாலினத்தை கண்டறிந்து கூறிய வாலிபர் கைது

image

கள்ளக்குறிச்சி வ.உ.சி நகர் பகுதியில் உள்ள வீட்டில், கருவில் உள்ள சிசு ஆணா, பெண்ணா என ஸ்கேன் இயந்திரம் மூலமாக சிசுவின் பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த ரஞ்சித் குமார் என்பவரை போலீசார் நேற்று (ஜன.21) கைது செய்தனர். அவரிடமிருந்து இரண்டு ஸ்கேன் இயந்திரங்கள், கருக்கலைப்பு செய்யும் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News January 22, 2025

நாளை காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

image

அசாம் மாநிலம் குவஹாட்டியில் பான்பஜார் காவல் நிலையத்தில் ராகுல்காந்தி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கருத்து சுதந்திரத்தை பறிக்கின்ற வகையில் தொடர்ந்து ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கின்ற பாரதிய ஜனதா அரசை கண்டித்து நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் பகண்டை கூட்ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் அறிவித்துள்ளார்.

News January 21, 2025

ஆட்சியரிடம் விசிக மாவட்ட செயலாளர் மனு

image

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு மாநில கட்சி அந்தஸ்து தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு விசிக நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் வேல் பழனியம்மாள் இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தார். உடன் பெரியார் சசி இருந்தார்.

News January 21, 2025

இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (21.1.2025) இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள்குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம்.

News January 21, 2025

திருக்கோவிலூர் மருத்துவமனைக்கு விருது

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு சிறந்த சேவைக்காக சிறப்பு விருதினை திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர் (பொ) டாக்டர் ராஜவிநாயகத்திடம் இன்று சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். அப்போது கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியாசாகு, தேசிய சுகாதார இயக்கக இயக்குனர் அருண்தம்புராஜ் உடனிருந்தார்.

News January 21, 2025

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவுறுத்தல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசு திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் எம்எஸ். பிரசாந்த் அவர்கள் இன்று (21.1.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது அரசு திட்டப்பணிகளின் பதிவேடுகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

error: Content is protected !!