Kallakurichi

News January 25, 2025

அனைத்து ஊராட்சிகளிலும் நாளை கிராம சபை கூட்டம்

image

கள்ளக்குறிச்சியில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், நாளை (ஜன.26) ஊராட்சி தலைவர்கள் தலைமையில், சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து விவாதிக்கப்படும். மேலும், ஒப்புதல் தீர்மானங்களும் கொண்டு வரப்படும். இதனால் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..

News January 24, 2025

தவெக கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் நியமனம்

image

தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை  நடிகர் விஜய் தொடங்கினார். தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்களை இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் கிழக்கு மாவட்ட செயலாளராக பரணி பாலாஜி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று அறிவித்துள்ளார்.

News January 24, 2025

விதிமுறையை மீறினால் நடவடிக்கை: ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கால்நடைகளை அனுமதியின்றி வாகனங்களில் கொண்டு செல்வது, வாகனங்களில் கால்நடைகள் சுவாசிக்க போதுமான இடம் அளிக்காமல் அதிக எண்ணிக்கையில் நெருக்கமாக ஏற்றி செல்வது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு அனுமதியின்றி வாகனங்களில் கால்நடைகளை கொண்டு சென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 24, 2025

சார்நிலை அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி

image

கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு துறை சார்நிலை அலுவலர்களுக்கான மூன்று நாட்கள் புத்தாக்க பயிற்சி நேற்று (ஜன.23) தொடங்கியது. கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார். இதில் சார்நிலை பணியாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.

News January 24, 2025

ரிஷிவந்தியம் முன்னாள் எம்.எல்.ஏ உயிரிழப்பு

image

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 1991 முதல் 1996 வரை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த  அத்தியூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜீலு என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (ஜன.24) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். ஷேர் செய்யவும்..

News January 24, 2025

கள்ளக்குறிச்சியில் இன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சியில் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இன்று (ஜன.24) காலை 10- 1 மணி வரை துருகம் சாலையில் உள்ள அரிசி ஆலை உரிமையாளர் சங்க மண்டபத்தில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. எனவே இவ்வாய்ப்பை வேலை வாய்ப்பற்றோர் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..

News January 24, 2025

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையமா? இருசக்கர வாகனங்கள் நிலையமா?

image

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திற்கு உள்ளே இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர், வெளியூர் பேருந்துகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பயணிகள் பேருந்தில் ஏற முடியாமல் தவித்து வருகின்றனர். பேருந்துகள் நிறுத்தத்திற்கு ஒதுக்கப்பட இடத்தில் நிறுத்த முடியாமல் தவிக்கும் அவல நிலை ஏற்படுகிறது. எனவே, இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

News January 24, 2025

கள்ளக்குறிச்சியில் நாளை மறுநாள் கிராம சபை கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 412 கிராம ஊராட்சிகளிலும் நாளை மறுநாள் குடியரசு தினத்தன்று ஊராட்சி மன்ற தலைவர்களால் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது செலவினம், டெங்கு தடுப்பு நடவடிக்கை, ஜல் ஜீவன் இயக்கம் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஷேர் செய்யவும்..

News January 23, 2025

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 23, 2025

கனியாமூர் பகுதியில் போலி மருத்துவர் கைது

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் செயல்பட்டு வரும் மகிழினி மெடிக்கலில் கச்சிராயபாளையம் வட்டார மருத்துவ அலுவலர் சிவபிரசாத் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அரசு அனுமதி பெறாமல் மெடிக்கலில் மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்த நிலையில், அந்த மெடிக்கலுக்கு சீல் வைத்து மருத்துவ பொருட்களை பறிமுதல் செய்து போலி மருத்துவர் அசோக் என்பவரையும் இன்று கைது செய்தனர்.

error: Content is protected !!