India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செங்குறிச்சியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன்பேரில், உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியபோது அதே கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவரது வீட்டில் சோதனை செய்த போது, மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. பின் கணேசனை கைதுசெய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மற்றும் எடுத்தவாய் நத்தம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.18) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கள்ளக்குறிச்சி மற்றும் எடுத்தவாய் நத்தம் சுற்றியுள்ள கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என கள்ளக்குறிச்சி மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் கணேசன் என செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக செயலாளருமான உதயசூரியன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அங்கையற்கண்ணி ஆகியோர் இன்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர்.
தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகர், ஜெயமணி ஆகியோர் தலைமையிலான போலீசார் தியாகதுருகம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது பாட்டில் விற்பனை செய்ததாக ரிஷிவந்தியம் அருகே வேடநத்தம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி , உதயமாம்பட்டு பகுதியைச் சேர்ந்த லட்சாதிபதி , வல்லரசு ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் இன்று (ஜன.15) எஸ்.பி ரஜத் சதுர்வேதி தலைமையில், போலீசார் இணைந்து சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். இதில் கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி தேவராஜ் எஸ்.பி, இன்ஸ்பெக்டர் சக்தி உள்ளிட்ட போலீசார் தமிழரின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சட்டை அணிந்தபடி பொங்கல் வைத்து கொண்டாடினர்.
திருவள்ளுவா் தினமான (ஜன.15) கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பாா்கள், ஹோட்டல்களைச் சாா்ந்த பாா்களில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. இவை கட்டாயம் மூடப்பட வேண்டும். அவ்வாறு மூடப்படாமல், மதுபானம் விற்பனையில் ஈடுபடும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பாா்கள் மீது மதுபானம் விற்பனை விதிகள்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இன்று (ஜன.15) அனைத்து விதமான இறைச்சி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி உள்ளிட்டவற்றின் இறைச்சியை விற்பனை செய்யக் கூடாது, கடைகளை திறந்து வைக்கவும் கூடாது, மீறி செயல்படுபவர்களின் கடைகளில் உள்ள இறைச்சியை பறிமுதல் செய்வதுடன் பொது சுகாதார சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தைத்திருநாளை பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தின் பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்து அமைதி நிலவும் விவசாயம் வளர்ச்சி அடையவும் சமத்துவ பொங்கல் வைத்து காவல் ஆய்வாளர் சுமதி தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் திருக்கோவிலூர் உட்கோட்டை டிஎஸ்பி பார்த்திபன் கலந்து கொண்டார்.
Sorry, no posts matched your criteria.