India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஈருடையாம்பட்டு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜன.21) நடைபெற இருப்பதால் ஈருடையாம்பட்டு, மூங்கில்துறைப் பட்டு, அரும்பரம்பட்டு, ஆற்கவாடி, சுத்தமலை, ஆதனூர், மங்கலம், வடமாமந்தூர், தர்கா, மைக்கேல்புரம், சவேரியார்பாளையம், பொரசப்பட்டு, மேல்சிறுவள்ளூர், வடபொன்பரப்பி, வடக்கீரனூர், சீர்பாதநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 – 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. ஷேர் செய்யவும்..
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. அதற்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது. உங்களுடைய பகுதிகளில் மழை பெய்தால் தெரிவிக்கவும்.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் நியமனம் செய்வது தொடர்பாக கட்சியின் சார்பில் தேர்தல் நடத்தப்பட்டு மாவட்ட தலைவர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அதற்கான அறிவிப்பு இன்று பாஜக தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி பாஜக மாவட்ட தலைவராக பாலசுந்தரம் என்பவர் நியமனம் செய்யப்படுவதாக பாரதிய ஜனதா கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 34,793 ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடக்கிறது. நேற்று வரை 1.87 கோடி அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 85 சதவீத பணி நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பயனாளர்களுக்கு வரும் 25ஆம் தேதி வரை வழங்குவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விடுபட்ட அட்டைதாரர்கள் வாங்கிக் கொள்ளலாம்.
திருக்கோவிலூர் அடுத்த துலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் அன்பு (19) . இவர் நேற்று முன்தினம் மாலை பைக்கில் ரிஷிவந்தியம் நோக்கி சென்றபோது எதிரே அதிவேகமாக வந்த பைக் அன்பு ஓட்டி வந்த பைக்கின் மீது மோதியதில், அன்பு பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக ரிஷிவந்தியம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பொங்கல் விடுமுறை முடிந்து கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்கு செல்லும் பயணிகளுக்காக கள்ளக்குறிச்சி, சின்னசேலம், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் ஆகிய பணிமனைகளில் இருந்து கூடுதலாக 30 பஸ்களும், 15 தனியார் பஸ்களும் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருக்கோவிலூர் மற்றும் மணலூர்பேட்டையில் ஆண்டுதோறும் தைமாதம் 5ஆம் தேதி தென்பெண்ணை ஆற்றில் ஆற்றுத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் இன்று ஆற்றுத் திருவிழா இரண்டு இடங்களிலும் வெகு விமரிசையாக நடைபெற்றது. சுற்றுப்புற பகுதியில் இருந்து பல்வேறு கோவில்களில் வந்து தீர்த்தவாரி நடத்தி அருள்பாலித்தனர். அதோடு சிறு, குறு வியாபாரிகள் பொழுதுபோக்கு கடைகள் அமைத்தால் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை பேரூராட்சி தென்பெண்ணை ஆற்றில் நடைபெற்ற தீர்த்தவாரி பெருவிழாவில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் மற்றும் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த தீர்த்தவாரி பெருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.