India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் கோயில் மலையை காக்கவும், மத நல்லிணக்கத்தை காக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும் பிப்ரவரி 4-ஆம் தேதி அன்று கள்ளக்குறிச்சியில் உள்ள 22 ஒன்றியங்களிலும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பாஜக மாவட்ட தலைவர் பாலசுந்தரம் இன்று அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த சத்திய நாராயணன், ஸ்ரீபெரும்புதூர் வருவாய் அலுவலராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட வருவாய் அலுவலராக, கோயம்புத்தூர் நெடுஞ்சாலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த ஜீவா நியமிக்கப்பட்ட நிலையில், இன்று மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் ஜீவா பொறுப்பேற்றுக் கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உதான் திட்டத்தின் கீழ் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள ஐந்து இடங்களில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள விமான ஓடுதளங்களை சீரமைத்து, விமான நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் பேரறிஞர் அண்ணாவின் 56ஆவது நினைவு நாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட கழக செயலாளர் குமரகுரு மற்றும் முன்னாள் அமைச்சர் மோகன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் பேரறிஞர் அண்ணா மற்றும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆகியோரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சங்கராபுரம், பண்டலம், வட சிறுவள்ளூர், அரசம்பட்டு, அரசராம்பட்டு, மஞ்சபுத்தூர், ஜவுளிக்குப்பம், பச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மஹாலில் இன்று எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் கள்ளக்குறிச்சி புதிய மாவட்ட தலைவரை தேர்வு செய்வதற்கான நிகழ்வு நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி எஸ்டிபிஐ கட்சியின் புதிய மாவட்ட தலைவராக சிராஜுதீன் என்பவர் இன்று தேர்வு செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு பிப்ரவரி 3-ஆம் தேதி அன்று பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு அமைச்சர் எ.வ.வேலு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாக திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுகவினர் திரளாக பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க கடைகளில் திடீர் தணிக்கை விபரம், மருந்தகங்கள் ஆய்வு, வழக்குகள் விபரம், கல்லூரிகளில் விழிப்புணர்வு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை ஊராட்சி ஒன்றியம் கரியாலூர் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கி.பி ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுக்கல் புடைப்பு சிற்பத்தினை, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.