India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பேரூராட்சிக்குட்பட்ட ஏழாவது வார்டு கவுன்சிலர் உமா மகேஸ்வரி கணவர் கோவிந்தனுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பழுப்பு பள்ளம் எடுத்த போது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால் சங்கராபுரத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் திருக்கோவிலூர் டிஎஸ்பி பார்த்திபன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூரில் உள்ள தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிரசாந்த் இன்று நேரில் பார்வையிட்டு மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3ஆவது புத்தகத் திருவிழா பிப்ரவரி 14 தொடங்கி 23 வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த புத்தக திருவிழாவை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு திறந்து வைத்து புத்தகக் கண்காட்சியை பார்வையிடுகிறார். இதில் மாவட்ட ஆட்சியர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <
கள்ளக்குறிச்சி மாவட்டம், புதுப்பேட்டை கிராமத்தில் பெண் கூலித் தொழிலாளி சின்னப்பொண்ணு என்பவரது நிலப்பிரச்சினை தொடர்பாக காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம் நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட போது, அவரை தரக்குறைவாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்தநிலையில், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகத்தை ஆயுதப்படைக்கு பணியிடை மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி இன்று உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் (12.2.2025) இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு. மார்க்கெட்டிங் பிரிவில் இருக்கும் 234 ஜூனியர் நிர்வாகி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பல்வேறு பிரிவுகளில் பொறியியல் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும். <
கள்ளக்குறிச்சி துருகம் சாலை வி.எம்.திடலில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் பொது நுாலக இயக்ககம் சார்பில் 3வது கல்லை புத்தகத் திருவிழா வரும் 14ம் தேதி துவங்கி, 23 வரை நடக்கிறது. இதில் அரங்குகள் அமைக்கப்பட்டு, தமிழகத்தின் முன்னணி நிறுவன பதிப்பகத்தாரின் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. டிரைவர், ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது. செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,700 – ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி, திறன், எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை செய்து தேர்வு செய்யப்படுவார்கள்.<
Sorry, no posts matched your criteria.