India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயலால் சேதமடைந்த பயிர்கள் குறித்து முறையாக கணக்கெடுக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான 3.23 இலட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு மொத்தம் 5,18,783 விவசாயிகள் பயனடையும் வகையில் 498.80 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் உத்தரவிடப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
செங்குறிச்சி சேர்ந்த அய்யப்பன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணியனுக்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்னை இருந்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு டிச., 5ஆம் தேதி சுப்ரமணியனின் பேரன்கள் சுபாஷ், சுதாகர் இருவரும் அய்யப்பன் மகளிடம் தகராறு செய்து தாக்கியுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த உளுந்தூர்பேட்டை மாஜிஸ்திரேட் கோமதி, சுப்ரமணியன், சுபாஷ் ஆகியோருக்கு 18 மாதம் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
மதுரவாயல், ஆலப்பாக்கத்தில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 22தேதி நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளாதாரம், வரலாறு, இந்தி, அறிவியல் என 10,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். தொடர்புக்கு – 8248470862, 9442568675, 8015343462. இந்த வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (பிப்.18) பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், உளுந்தூர்பேட்டை 33 KV சேந்தநாடு 33 KV A.சாத்தனூர் 33KV எறையூர் 11KV குமாரமங்கலம் 11KV உளுந்தூர்பேட்டை டவுன் 11KV பு.மாம்பாக்கம் 11KV சேந்தமங்கலம் 11KV நீதிமன்றம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும். ஷேர் செய்யவும்
மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளன. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்
கச்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி. இவரது மகன் சதீஷ்க்கு கடந்த 10ஆம் தேதி, திருக்கோவிலூர், கீழையூரில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருமணம் நடந்தது. அப்போது, மொய் பணம் ஒரு லட்சம் ரூபாயை பையில் வைத்திருந்தார். அவரது அருகில் இருந்த அமர்ந்திருந்த பெண் ஒருவர் பணம் வைத்திருந்த பையை திருடிச் சென்றார். புகாரின் பேரில், திருக்கோவிலுார் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவசர உதவிக்கு மேற்கொண்ட அதிகாரிகளின் தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் துணை ராணுவத்தின் ஒரு பிரிவான மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) கீழ் காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். டிரைவர் மற்றும் பம்ப ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10ஆம் வகுப்பு தகுதி போதுமானது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். வரும் மார்ச் 4ஆம் தேதிக்குள் .<
கள்ளக்குறிச்சி-தியாகதுருகம் சாலை வி.எம் திடலில் 3வது கல்லை புத்தகத் திருவிழா நேற்று முன்தினம் பிப்ரவரி 14-ம் தேதி துவங்கியது. பல்வேறு பதிப்பகங்களின் புத்தகங்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முதல் நாள் விழாவில், மொத்தம் 20,075 பேர் கண்டுகளித்தனர். 2 லட்சத்து 23 ஆயிரத்து 594 ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையானது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.