Kallakurichi

News February 21, 2025

சிறுமிகளிடம் சில்மிஷம் 2 பேரிடம் விசாரணை

image

கள்ளக்குறிச்சி அடுத்த கீழப்பாளையத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். அதேபோல, சுந்தரவாண்டி பகுதியைச் சேர்ந்த முகமதுயாகூப் என்பவர் 6ஆம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த இரு வேறு புகார்களின் பேரில் உளுந்துார்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து நேற்று இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 21, 2025

+2 மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், அரியலூர் (வாணாபுரம்) அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் வரும் 26.02.2025 அன்று காலை 10.00 மணிமுதல் மதியம் 1.30 மணிவரை +2 மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த்  தலைமையில் நடைபெற உள்ளது.  ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் வரவேற்புரை ஆற்றுவார்.

News February 21, 2025

வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கண்காணிப்புக்குழு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நேற்று பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெற்றது. இதில் திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News February 21, 2025

இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 20, 2025

திருக்கோவிலூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

image

திருக்கோவிலூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசிற்கு வலியுறுத்தி, திருக்கோவிலூரில் தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த அனைத்து கட்சியினர் மற்றும் அனைத்து அமைப்பினர் ஒருங்கிணைந்து இன்று மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

News February 20, 2025

கள்ளக்குறிச்சி ஆட்சியர் நேரில் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமான பணிகளை இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரடியாக சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைபடத்தினையும் வைத்து மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார்.

News February 20, 2025

கள்ளக்குறிச்சியில் மின் தடை ஏற்படும் பகுதிகள்

image

மின் பராமரிப்பு காரணமாக கள்ளக்குறிச்சியில் உள்ள தியாகதுருகம், ரிஷிவந்தியம், நாகளூர், நிறைமதி, O.H.T, பழைய சிறுவாங்கூர், நகரம், நூரலை, எலவனாசூர்கோட்டை, மணலூர்பேட்டை, அத்திப்பாக்கம், காங்கேயனூர், அருந்தங்குடி, மூர்க்கன்பாடி, திருவரங்கம், பெத்தாசமுத்திரம், தோட்டப்பாடி, செம்பக்குறிச்சி, பாக்கம்பாடி, குகையூர், நைனார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை வரை மின் தடை செய்யப்படும்.

News February 19, 2025

கால்நடை தடுப்பூசி முகாம் நாளை முதல் துவக்கம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கால்நடை கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம் நாளை முதல் துவங்குகிறது. இந்த முகாம் வரும், மார்ச் 19ம் தேதி வரை நடக்கிறது. கறவை மாடுகளுக்கு கருச்சிதைவு நோய் ஏற்படுகிறது. இதனைத் தவிர்ப்பதற்காக தேசிய கால்நடைகள் நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் கன்று வீச்சு நோய்க்கான தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் விவசாயிகள் கால்நடைகளுடன் முகாமில் பங்கேற்று பயனடைலாம்.

News February 19, 2025

பள்ளி மாணவனை கத்தியால் வெட்டிய இருவர் கைது

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சீயமங்கலம் கிராமத்தில் பூபாலன் மற்றும் கோபால் இருவருக்கும் நிலப் பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று பூபாலன் மகன் 11ஆம் வகுப்பு படிக்கும் பார்த்தசாரதியை கோபால் மகன்கள் தங்கதுரை, தர்மதுரை ஆகிய இருவரும் கத்தியால் வெட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் தங்கதுரை மற்றும் தர்மதுரை ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

News February 19, 2025

பிப்.23ல் வேலை வாய்ப்பு முகாம்

image

சங்கராபுரம் அடுத்த மயிலாம்பாறையில் பிப்.23-ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்ட நிா்வாகம், வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் சாா்பில், மயிலாம்பாறை புனித ஜோசப் அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. மேலும் விவரங்களுக்கு 88072 04332, 04151-295422 என்ற எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

error: Content is protected !!