Kallakurichi

News September 21, 2024

கள்ளக்குறிச்சியில் மழைக்கு வாய்ப்பு

image

மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் பகிரவும்.

News September 21, 2024

4 வாரங்களுக்குள் கூடுதல் பேருந்துகள் இயக்க உத்தரவு

image

கல்வராயன்மலை பகுதிக்கு 4 வாரங்களுக்குள் போக்குவரத்து வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. லாபத்தை கருத்தில் கொள்ளாமல் கல்வராயன் மலை பகுதி மக்களுக்கு கூடுதல் இனி பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

News September 21, 2024

கள்ளக்குறிச்சியில் மின்தடை ரத்து

image

கள்ளக்குறிச்சி துணை மின்நிலையத்தில் செப்டம்பர் 21-ஆம் தேதி அன்று மேற்கொள்ளப்பட இருந்த மாதாந்திர பராமரிப்பு பணி நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை வழக்கம்போல் மின் விநியோகம் இருக்கும் என மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் இன்று அறிவித்துள்ளார். மாற்றுத் தேதியில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 20, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (20.09.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 20, 2024

புகையிலை பொருட்கள் கடத்திய 5 பேர் மீது வழக்கு பதிவு

image

கள்ளக்குறிச்சியில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்து விற்பனை செய்த வழக்கில் அரசு பேருந்து ஓட்டுனர் செல்வராஜ், நடத்துனர் மணிவேல் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து பத்மநாபன், ராஜேஷ், திலீப்கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர்.இதனையடுத்து போலீசார் கைது செய்யப்பட்ட பத்மநாபன் கடை மற்றும் வீடுகளில் ரூ.12 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.85 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

News September 20, 2024

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த இன்றுடன் விசாரணை நிறைவடைந்தது. இந்த நிலையில், தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் தள்ளி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News September 19, 2024

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (19.09.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 19, 2024

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேலை நாடுனர்கள் தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் வரும் 28ஆம் தேதி பகண்டை கூட்ரோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

News September 19, 2024

தலைமை செயலாளர் தனி கவனம் செலுத்த உத்தரவு

image

கல்வராயன்மலைப் பகுதி மக்கள் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும், மலைவாழ் மக்களுக்கு ரேஷன் அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். மலைவாழ் மக்கள் விவகாரத்தில் தலைமைச் செயலாளர் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர்.

News September 19, 2024

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

image

கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மகாலிங்கம் தலைமையில் திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழ்நாடு முதல்வரின் கவனத்தை ஈட்டிடும் வகையிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.