Kallakurichi

News October 4, 2024

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மாவட்ட அளவில் அனைத்து அரசு, தனியார் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், வரும் அக்.31-க்குள் தமிழ் வளர்ச்சித் துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பங்களை வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News October 4, 2024

கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தாலோ அல்லது கடத்தினாலோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News October 4, 2024

கள்ளக்குறிச்சியில் தக்காளி விலை உயர்வு

image

கள்ளக்குறிச்சி பகுதியில் தக்காளி விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. தக்காளி வரத்து குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை உயர்ந்தது. கடந்த வாரம் ரூ.35க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி கடந்த சில நாட்களாக ரூ.60 முதல் ரூ.62 என விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.8 உயர்ந்து ரூ.70 உயர்ந்துள்ளது. இந்த விலை ரூ.100-ஐ தாண்டும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

News October 4, 2024

கள்ளக்குறிச்சியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

லட்சதீவு அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த சுழற்சியை நோக்கி வங்கக்கடல் காற்றும் பயணிப்பதால், தமிழகத்தில் மழைக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, இன்று (அக்.4) தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 4, 2024

வீரர்களை வழி அனுப்பி வைத்த மாவட்ட ஆட்சியர்

image

மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைகாண போட்டிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து வீரர் வீராங்கனைகள் புறப்பட்டனர். அவர்களை கள்ளக்குறிச்சி
மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வாழ்த்தி பேருந்தின் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். அப்பொழுது பேருந்தில் அமர்ந்தபடி இருந்த வீரர்களை பார்த்து கொடியை அசைத்து வாகனத்தை அனுப்பி வைத்தார்.

News October 3, 2024

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் நியமனம்

image

தமிழகத்தில் 14 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ஒரே நேரத்தில் முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பாளராக பணிபுரிந்த பவானி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

News October 3, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அருந்தங்குடி ஊராட்சியில் வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தூர்வாரும் பணி நடைபெற்று வரும் இடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது நீர்வளத் துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News October 3, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திரா கர்நாடகா கேரளா மாநிலங்களில் உள்ளது போன்று இணைய வழி வேளாண்மை பணியை செயல்படுத்த வேண்டும். தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்க வேண்டும் வருவாய் கிராமங்களை பிரிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

News October 3, 2024

சாதனை படைத்த கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி

image

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 5 ஆயிரம் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 600க்கும் மேற்பட்ட ஒட்டுக்குடல், பித்தப்பை குடல், இறக்கம் போன்ற அறுவை சிகிச்சைகள் மற்றும் முன் துளை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனைப் படைத்துள்ளனர். குறிப்பாக லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர் என தலைமை மருத்துவர் நேரு தெரிவித்தார்.

News October 2, 2024

விசிக மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விசிக ‘மது போதைப் பொருள் ஒழிப்பு’ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு ஏதுவாக, மதுபான கடைகளை மூடுவதற்குரிய கால அட்டவணையை மாநில அரசு அறிவிக்க வேண்டும், மதுவிலக்கை அமல்படுத்தும் மாநில அரசுகளுக்கு சிறப்பு நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட 13 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.