India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (06.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் பொதுமக்களின் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உளுந்தூர்பேட்டை அருகே மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மனைவி ராஜகுமாரி. இவர் நேற்று புதிதாக கட்டி வரும் வீட்டின் பகுதியில் மின் வயரில் தெரியாமல் கை வைத்துள்ளார். இதில் மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி பகுதிகளில் இரவு நேரங்களில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் நேற்று இரவு நேரங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஓட்டுனர் உரிமம், ஆர்சி புத்தகம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் என போக்குவரத்து விதிகளை மீறியதாக 48 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்து பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், போதைப் பொருட்கள் விற்பனை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி, குறிப்பாக கஞ்சா விற்பனை, கடத்தல் போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத்சதுர்வேதி, எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பட்டாசு கடை வைக்க தற்காலிக உரிமை தேவைப்படுபவர்கள் 19.10.2024 இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அப்படி உரிமை இல்லாமல் பட்டாசு கடை வைப்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.
சின்னசேலம் அருகே தகரை காப்புக்காடு வனப்பகுதியில் அடி பெருமாள் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவில் புரட்டாசி மாதத்தில் மூன்றாவது சனிக்கிழமை என்பதனால் அடி பெருமாள் கோவிலில் உள்ள அடி பெருமாள் ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கம்பீரமாக நின்றபடி காட்சியளித்தார். இதை சின்னசேலம் கச்சிராயபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் காவல் நிலையம் எல்லைக்கு உட்கோட்ட பகுதிகளில் உள்ள கிராமமக்கள் தற்போது மழை காலம் ஆரம்பித்து உள்ளதால் தங்களுடைய குழந்தைகளை நீர்நிலைகளின் அருகில் விளையாடவோ, குளிக்கவோ செல்லாதவாறு, கண்காணித்து மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என திருக்கோவிலூர் காவல் துணைக் காண்பிப்பார் பார்த்திபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவர் கோவையைச் சேர்ந்த ரகுராமன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது ரகுராமன் உங்கள் மகளுக்கும், மருமகனுக்கும் இளநிலை உதவியாளர் வேலை வாங்கித் தருகிறேன் எனக் கூறி ரூ.15 லட்சம் வாங்கி ஏமாற்றியுள்ளார். இது குறித்து புண்ணியமூர்த்தி போலீசாரில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் அக்.15 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல் ழேடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. மக்களே வெளியே செல்லும் முன் கவனமாக இருங்கள். குடை எடுத்துச் செல்லுங்கள்.
தண்டலை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து பத்தாயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்ற சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன் மற்றும் சசிகுமார் இருவரையும் கள்ளக்குறிச்சி போலீசார் இன்று கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.