India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட பால்ராம்பட்டு ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று மார்ச் 10 ஆம் தேதி அன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் போது சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் தா.உதயசூரியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பரோடா வங்கியில் 518 சிறப்பு அலுவலர் காலிப் பணியிடங்கள் உள்ளன. மாதம் ரூ.48,400 – ரூ. 67,160 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளன. முதுநிலை மேலாளர் பணிக்கு 27 – 37 வயதிற்குள்ளும், மேனஜர் ஆபிசர் பணிக்கு 22 – 32க்குள்ளும் இருக்க வேண்டும். பணி அனுபவம், கல்வித்தகுதி அடிப்படையில் எழுத்துத்தேர்வுக்கு அழைக்கப்பட்பட்டு தேர்வு செய்யப்படுவர். நாளைக்குள் (மார்ச் 11) இந்த லிங்கை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளர் தனசேகர் கொளத்தூர் கூட்ரோடு அருகே இன்று வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்த குமார், அரசம்பட்டு சேர்ந்த தாமோதரன், சோழவண்டிபுரம் காலிபா ஆகிய 3 பேரை விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடமிருந்து 8 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய மினி பஸ் இயக்க பஸ் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், உளுந்தூர்பேட்டையில் 15 வழித்தடங்களில் 44 பேரும், கள்ளக்குறிச்சியில் 17 வழித்தடங்களுக்கு 18 பேரும் விண்ணப்பித்திருந்தனர். இதன் மூலம் மாவட்டத்தில், 25 வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்க விரைவில் அனுமதி வழங்கப்பட உள்ளது.
மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் உள்ள புறம்போக்கு நிலங்கள், பட்டா இல்லாத நிலங்கள், அரசு விதிமுறைக்கு உட்பட்டு முறையாக கணக்கெடுப்பு செய்திட வேண்டும், நகரப் பகுதிகளில் வீடுகள் கட்டி வீட்டு மனைப்பட்டா பெறாத நபர்களை கணக்கீடு செய்து தகுதியின் அடிப்படையில் பட்டாக்கள் வழங்க வேண்டும். ரூ.3 லட்சத்திற்கு குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு பட்டா வழங்கும் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
க.செல்லம்பட்டையை சேர்ந்தவர் கணேசன். திருப்பூரில் கூலி வேலை செய்து வந்தார். ரேஷன் கடையில் கை விரல் ரேகை பதிவு செய்ய திருப்பூரில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு பஸ்சில் வந்தார். அடுத்த நாள் கள்ளக்குறிச்சி பஸ்நிலையம் அருகே இறந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார், அவரது உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் ரோடு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட கட்டிடத் தொழிலாளர் நல சங்க கட்டிடத்தினை நாளை தமிழக அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைக்க உள்ளார். இதில் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ள உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதனால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்கு உறுதியான காரணம் இல்லை. 30 வயதைக் கடந்த பெண்களுக்கு எவ்வாறு மாா்கப் புற்றுநோய் பரிசோதனை அவசியமோ, அதுபோலவே 20 வயதுக்குப் பிறகு ஆண்டுக்கு ஒருமுறையாவது பெண்கள் இதய நலப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மகளிா் தினத்தில் இதய நலம் காப்பதற்கான உறுதிமொழியை அனைத்துப் பெண்களும் மேற்கொண்டால் ஆரோக்கியமான சமூகம் அமையப்பெறும். ஷேர் செய்யுங்க
Sorry, no posts matched your criteria.