India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உளுந்தூர்பேட்டை அங்காளம்மன் திருக்கோவிலில் நூறு சதவீத வாக்களிப்பின் அவசியம் குறித்தும் தேர்தல் நாளை நினைவூட்டும் வகையிலும் விளக்குகளால் தேர்தல் தேதி குறிப்பிடப்பட்டு ஏற்றப்பட்டது. குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணி அலுவலர் தலைமையில் குழந்தை வளர்ச்சி பணியாளர்கள் மூலம் இந்த நிகழ்ச்சி நேற்று மாலை 5.30 மணி அளவில் நடைபெற்றது.
தமிழகத்தின் மக்களவைத் தேர்தல் ஏப்ரல். 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ள நிலையில் பணத்திற்காக விலை போக மாட்டோம் எங்கள் உரிமை ஓட்டு அதை நாங்கள் விற்கமாட்டோம் என நரிக்குறவர் சமுதாயத்தினர் தெரிவித்துள்ளனர். எனவே எங்கள் நறிக்குறவர்கள் குடியிருப்பு , பகுதிக்குள் வரும் கட்சி நிர்வாகிகள் யாரும் பணம் கொடுத்து எங்களை விலைக்கு வாங்க வேண்டாம் என பேனர் அடித்து தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அலுவலர்கள் காவல்துறையினர் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி இன்றும் நாளையும் தங்களது தபால் வாக்குகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சேவை மையத்தில் நேரடியாக வந்து செலுத்தலாம் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஷ்ரவன்குமார் அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல்.19ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது இதனால், நாளை முதல் 19 ஆம் தேதி வரை அரசு மதுபான கடைக்கு தமிழக அரசு விடுமுறை அளித்துள்ளது. அதனால் ஊழியர்கள் 3 நாள் தொடர் விடுமுறை மேலும் டாஸ்மார்க் விடுமுறை போது கள்ள சந்தையில் சாராயம் மது பாட்டில்கள் விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
சின்னசேலம் அண்ணாநகர் பகுதியில் சாலையில் பெரியசாமி என்பவர் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் சிகரெட் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஆகி அடிதடியில் முடிந்தது. அப்போது, ஆத்திரமடைந்த பெரியசாமி கடையில் வைத்திருந்த கத்தி எடுத்து தினேஷ் கையில் குத்தியுள்ளார். இதில் காயம் அடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கிளாப்பாளையம் கிராமத்தில் திருநாவலூர் மேற்கு திமுக ஒன்றிய செயலாளர் முருகன் என்பவரது வீட்டில் இன்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திடீரென வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அரை மணி நேர சோதனைக்கு பின்பு எந்தவிதமான ஆவணங்களும் பணங்களும் கிடைக்காத நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், புகைப்படம் மற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் பணியை மாவட்ட தேர்தல் அதிகாரி ஷ்ரவன்குமார், தேர்தல் பொது பார்வையாளர் அசோக்குமார் கார்க், நேற்று ஆய்வு செய்தனர்.
கள்ளக்குறிச்சி வானாபுரம் அடுத்து ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்த ரேகா என்பவர் நேற்று தனது 13 ஆடுகளை
ஏந்தல் பகுதியில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். அப்போது அங்கு, விளைநிலத்தில் இருந்த தொட்டியில் ஆடுகள் தண்ணீர் குடித்தன. சிறிது நேரத்தில் 13 ஆடுகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் சுருண்டு விழுந்து இறந்தன. போலீஸ் விசாரனையில் தொட்டி தண்ணீரில் உரம் கலந்திருப்பது தெரியவந்தது.
கால்கள் செயலிழந்துள்ள மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவு செய்ய வருகை தரும் வாக்குச்சாவடி மையத்தில் சக்கர நாற்காலி தேவைப்படும் என்பதனை முன்கூட்ட தெரிவிக்கும் வகையில் ‘சக்சம் ‘ என்ற பிரத்யேக செயலி மூலம் முன்பதிவு செய்துகொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷ்ரவன்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சங்கராபுரம் பகுதியில் சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். சங்கராபுரம் சப்- இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது, அப்பகுதி சுடுகாட்டில் சாராயம் விற்ற கரடிசித்துார் முருகன் (44), அரசம்பட்டி ரமேஷ் (40); விரியூர் சூசைநாதன் (44) ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 40 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினர்.
Sorry, no posts matched your criteria.