India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சி மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு <
கள்ளக்குறிச்சியில் பண்ணை சாரா கடன், இதர நீண்ட கால நிலுவை இனங்களுக்கான சிறப்பு கடன் தீர்வு திட்டம் செயல்ப்படுத்தப்பட உள்ளது. இது 9 சதவீத சாதாரண வட்டியுடன் நிலுவை தொகையை, வரும் 2025, செப்., 23ம் தேதிக்குள் ஒரே தவணையில் செலுத்த வேண்டும். தவணை தவறிய கடன்களுக்கான கூடுதல் வட்டி, அபராத வட்டி, இதர செலவினங்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என மண்டல இணை பதிவாளர் முருகேசன் தகவல் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV (தொகுதி IV) முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் இன்று (08.07.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு, தேர்வுப் பணிகளைச் சுமுகமாக நடத்துவது குறித்து விவாதித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஜூலை 8) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியாகியுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதனை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மகளிர் திட்டத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று (ஜூலை 8) நடைபெற்றது. இதில் மகளிர் திட்ட இயக்குநர் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார்பாளையம் பகுதியில் இன்று, தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 210 கிலோ ஹான்ஸ் மூட்டைகளை காரில் கடத்தி வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த சுக்காராம், தோராம் மற்றும் விஜய் பால் ஆகிய மூன்று பேரை கீழ்குப்பம் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 14 சாக்கு மூட்டைகளில் இருந்த ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் 3,800 துணை சுகாதார நிலையங்களில் உள்ள கிராம சுகாதார செவிலியர் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு செவிலியர் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவி சாந்தி, தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் ஜோதி இருதயமேரி முன்னிலை வகித்தார். மாநில செயலாளர்களான சுசீலா (பகுதி சுகாதார செவிலியர் சங்கம்), உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
பேங்க் ஆப் பரோடா வங்கியில் ‘லோக்கல் பேங்க் ஆபிசர்’ எனப்படும் உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2,500 பணியிடங்கள் நிரப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 60 பணியிடங்கள் உள்ளன. ரூ.48,480 – 85,920 வரை சம்பளம் வழங்கப்படும். தமிழ் தெரிந்திருக்க வேண்டும். டிகிரி இருந்தால் போதும் ஜூலை 24ஆம் தேதிக்குள் <
குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை இருந்தால் அந்த பெண் குழந்தைக்கு 3 வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும். இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் 2வது பெண் குழந்தைக்கு 3 வயது முடிவதற்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆதார் அட்டை, குடும்ப புகைப்படம் ஆகிய சான்றுகளுடன் அருகில் உள்ள இ-சேவை மையத்தில் உடனடியாக விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்குல் 04146-222288 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
கள்ளக்குறிச்சியில் முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தில் ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால், அப்பெண் குழந்தைக்கு ரூ.50 ஆயிரமும், இரண்டு குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25 ஆயிரம் வீதம் வைப்புத் தொகை சேமித்து வைக்கப்படும். <<16987300>>தொடர்ச்சி<<>>
Sorry, no posts matched your criteria.