Kallakurichi

News April 26, 2024

சின்னசேலம் கோவிலில் ராமநவமி சிறப்பு பூஜை

image

சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ராமநவமி சிறப்பு பூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் உற்சவ மூர்த்திகள் சீதாராம திருக்கல்யாண வைபவம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் தேங்காய் உருட்டுதல் மற்றும் பூ பந்து உருட்டும் நிகழ்ச்சியும், தொடர்ந்து சுவாமிக்கு மாலை மாற்றும் வைபவம் நடந்தது. பின்னர் சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் உள்ளிட்டவை அடங்கிய தாம்பூலம் வழங்கப்பட்டது.

News April 25, 2024

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (ஏப்.25) வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 25, 2024

கள்ளக்குறிச்சி: நீரில் மூழ்கி அக்கா தம்பி உயிரிழப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அடுத்து உள்ள ஜம்பை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது குழந்தைகளான சுப்புலட்சுமி (12), கார்த்திக் (11) ஆக இருவரும் இவர்களின் விவசாய நிலத்தின் அருகே உள்ள குட்டையில் குளிக்க சென்ற பொழுது, எதிர்பாராத விதமாக நேற்று (ஏப்.24) நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து மணலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 25, 2024

கள்ளக்குறிச்சி: நீரில் மூழ்கி அக்கா தம்பி உயிரிழப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அடுத்து உள்ள ஜம்பை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது குழந்தைகளான சுப்புலட்சுமி (12), கார்த்திக் (11) ஆக இருவரும் இவர்களின் விவசாய நிலத்தின் அருகே உள்ள குட்டையில் குளிக்க சென்ற பொழுது, எதிர்பாராத விதமாக இன்று (ஏப்.24) நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து மணலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 25, 2024

கள்ளக்குறிச்சி: ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த வாசுதேவனூர் கிராமத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டுள்ளது. சீலிடப்பட்டுள்ள அறைகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஷ்ரவன் குமார் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

News April 25, 2024

திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் கோவில் சிறப்பு

image

கள்ளக்குறிச்சி, தென்பெண்ணை ஆற்றில் அருகில் உள்ள திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானது. இக்கோயிலின் சிறப்பாக பெருமாள் ஒரு காலில் நின்ற நிலையில், மற்றொரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கின்றார். இது நிலத்தை அளக்கும் கோலமாகும். கோபுர நுழைவாயில்கள் கோயிலை ஒட்டி இல்லாமல், கோயிலை ஒட்டிய தெருக்களின் நுழைவாயில்களாக உள்ளது தனித்துவமானது.

News April 25, 2024

லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த லா.கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (26), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று அதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது கொணக்கலவாடி ஏரி அருகே லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இது குறித்து ரிஷிவந்தியம் போலீசார் நேற்று (ஏப்ரல்.,23) வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 25, 2024

கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை தேரோட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். மேலும், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம் உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

News April 25, 2024

கள்ளக்குறிச்சி: போதிய பேருந்து வசதியின்மையால் மக்கள் அவதி

image

சித்திரை பௌர்ணமியையொட்டி, பக்தர்கள் கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலைக்கு செல்வது வழக்கம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திருவண்ணாமலை செல்வதற்காக நேற்று மாலை ஏராளமான பக்தர்கள் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலும், அருகிலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமைனை வளாகத்திலும் காத்திருந்தனர்.  25 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

News April 24, 2024

கள்ளக்குறிச்சி: போலி நகையை அடகு வைத்த பெண் கைது

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் கடைத்தெரு பகுதியில் உள்ள நகை அடகு கடையில் 10 கிராம் எடை கொண்ட இரண்டு தங்க வளையல்களை 40 ஆயிரம் ரூபாய்க்கு சரண்யா என்பவர் அடகு வைத்து சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து அதனை சோதனை செய்தபோது நகை போலி என்பது தெரியவந்தது. இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் விசாரணை செய்ததில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சரண்யா என்ற பெண்ணை கைது செய்தனர்.

error: Content is protected !!